முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

கழகத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான 5.12.2024, வியாழக்கிழமை அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார்.

5.12.2024, வியாழக்கிழமை

🌟காலை 9.00மணி: சோமரசம்பேட்டை
🌟காலை 9.30மணி: குழு மணி
🌟காலை 10.00மணி: ஜீயபுரம்
🌟காலை 10.30மணி: முசிறி கைக்காட்டி
🌟காலை 11.15 மணி: துறையூர்
🌟 மதியம் 12.00மணி: மண்ணச்சநல்லூர்

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இங்ஙனம்:
அஇஅதிமுக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் சி விஜய் அவர்கள் திருச்சி வருகை வண்ணமயமான பதாகைகளை கொண்டு திருச்சியை விழாக்கோலம் பூண வைத்த ஸ்ரீரங்கம் தொழிலதிபர் மாரிமுத்து

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் நவம்பர் 2-ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வருகை தரவுள்ளார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.இதனையொட்டி பொதுப்பணித்துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின்…

    திருச்சி ரெயில்வே வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகள்

    தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் துரை வைகோ எம்.பி. நேரில் மனு சென்னை, செப். 28– திருச்சியின் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரெயில்வே பொது மேலாளரை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *