

அன்பில் தர்மலிங்கம்…….
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கலைஞரின் நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்.

அன்பில் பொய்யாமொழி…….
திமுகவின் இரண்டாம்கட்ட தலைவராய் உருவானவர். முதல்வர் ஸ்டாலினின் ஆருயிர் நண்பராய் வாழ்ந்து மறைந்தவர்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி…….
மூன்றாம் தலைமுறை திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் ஒருவர். துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இணைபிரியா நட்பிற்குச்சொந்தக்காரர்.

மூன்று தலைமுறைகளாகத்தொடரும் ஒரு நட்பு. இது மிக மிக அரிதான ஒன்று. தலைமுறைகளைத்தாண்டி தொடரும் இந்த நட்பு நான்காம் தலைமுறையிலும்தொடரும் என்பதில் ஐயமில்லை. காரணம் இந்த தலைமுறை தாண்டிய நட்பு எதையும் எதிர்பார்க்காமல் உண்மையான ஸ்நேகத்தை மட்டுமே குடும்பங்களில் விதைத்திருக்கிறது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மூத்த மகனும், முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் அன்பில் ப. தர்மலிங்கத்தின் பேரனுமாவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் ஆவார். இரு குடும்பங்களுக்கு இடையே பல பதின்ம ஆண்டுகளாக நீடிக்கும் நட்பு தாத்தா அன்பில் பி. தர்மலிங்கம், மு. கருணாநிதி காலம் தொடங்கி தந்தையர் அன்பில் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின், இப்போது மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் என மூன்று தலைமுறைகளாக அறியப்படுகிறது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏதோ விபத்து போல அரசியலில் தடம் பதித்தவர் அல்ல. இரண்டு தலைமுறை அரசியலை நன்கறிந்தவர். அரசியல் பல்கலைக்கழகமான கலைஞர் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தவர். அரசியல் இவருக்கு பால்ய காலம் முதலே பாலபாடம்.

மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி ஈ. ஆர். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஏப்ரல் 2001இல் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியலில் முதுநிலைப் படிப்பை முடித்தார். பத்தாண்டுகள் பல்வேறு தகவல் தொழில்நுட்பத் துறைகளில் மென்பொருள் உருவாக்குநராகப் பணியாற்றியவர்

2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் அன்றைய நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் முதல்வருடன் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று களப்பணி ஆற்றினார். திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 16வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 2021 மே மாதம் ஏழாம் தேதி அன்று பதவியேற்றார்.

*அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல – அது
தமிழ்நாட்டின் பெருமையின் அடையாளம்*
என இலட்சிய வேட்கை கொண்டு அரசுப்பள்ளிகளின் தரத்தை மேன்மைப்படுத்த அயராது உழைத்து வருகிறார்.்அதன் பயனாக இன்று தமிழக அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வண்ணம் தேர்ச்சி சதவிகித்த்தை உயர்த்தி இந்தியாவிற்கு முன்னுதாரணமாக உயர்ந்து வருகிறது என்றால் அதற்கு மகேஸ் அவர்களின் அயராத பணியும் அவரின் அக்கறையுமே ஆகும்.

*அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல – அது
தமிழ்நாட்டின் பெருமையின் அடையாளம்* என்ற அன்பிலாரின்வார்த்தைகள் இன்று மாணவர்களின் வேதமாக ஒலிக்கின்றது.

பள்ளிக்கல்வித்துறை யின் அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பல அதிரடிகளை நடத்தி வருபவர். 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இவர் காலடித்தடம் பதித்துள்ளார். ஒரு ஆசிரியரைப்போல வகுப்பறையில் நுழைந்து மாணவ மாணவிகளோடு எந்தவித பந்தாவும் இன்றி எளிமையாக அன்போடு உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் செயல்படுத்துவதாலேயே மாணவர்களின் செல்ல வாத்தியாக அறியப்படுகிறார . மாஸ்டர் தி ப்ளாஸ்டர் என மாணவ சமுதாயம் மட்டுமல்ல பெற்றோர்களும் இவரைக்கொண்டாடுகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் முதல்வரிடம் இருந்து பலவித சலுகைகளைப்பெற்று இந்தியாவிலேயே சிறந்த துறையாக தன் துறையை மாற்றியவர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் இவருக்கு நிகர் எவருமில்லை.

சமீபத்தில் கூட மணப்பாறையில் அங்கன்வாடி சத்துணவுக்கூடங்கள் பள்ளி வகுப்பறைகள் என 1.05 கோடிக்கு புதியதாக கட்டிடங்களை உருவாக்கி ஏழை மாணவர்களின் கல்விக்கு கண்களைத்திறந்தார். தன் தாத்தா மற்றும் அப்பாவின் நினைவாக அன்பில் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வருகிறார்.

என்றும் மாறாத புன்சிரிப்பு
எவரும் எளிதில் அணுகும் வண்ணம் எளிமை
தான் நிர்வகிக்கும் துறையில் கண்டிப்பு நேர்மை தவறுகள் நிகழாத வண்ணம் நிர்வாகம்
என 24 மணிநேரமும் சுறுசுறுப்பின் இலக்கணமாக இவர் திகழ்வதால் எந்நேரமும் இளைஞர் கூட்டம் இவர் பின்னாலேயே சுற்றி வருகின்றது.

*மகேஸ் எனும் மாயாஜாலம்* அரசியலில் மட்டுமல்ல பள்ளி கல்வித்துறையிலும் பல மாயங்களை நிகழ்த்தி வருவதால் மாணவர்களின் வாத்தியான இவர் தொடர்ந்து பல வெற்றிச்சாதனைகளைப்புரிய *நியூ திருச்சி டைம்ஸ்* என்றென்றும் வாழ்த்தி அவருக்கு துணை நிற்கும் என்பதை அவரின் பிறந்த தினமான இந்த நன்னாளில் கூறிக்கொண்டு *அன்பு வாத்தி* எங்கள் அன்பிலாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை சமர்ப்பிக்கின்றோம்.
