16வது வார்டு மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்ட துவக்க விழா

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் முன்னிலையில் 16வது வார்டு மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்ட துவக்க விழா நடைபெற்றது.

தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் ஆயிரம் மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை செலுத்தி அன்றாடம் தங்களின் வரவுகளை சேமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மகளளிருக்கு சேமிப்பு வைப்பு தொகை அட்டையை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் திருச்சி தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ராஜ்குமார், துணை அஞ்சலக அதிகாரி சீனிவாசன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அமைச்சர் பேசியதாவது இந்த மேடையில் நாங்கள் அமர்வதற்கு காரணமான தாய்மார்களை வணங்குவதாகவும் தமிழக துணை முதல்வர் மற்றும் எனது பிறந்த நாளை முன்னிட்டு 16வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் அவர்கள் 16வது வார்டுக்கு உட்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் பெண்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய்100.00 செலுத்தியுள்ளார் என்றும் நானும் இந்த 16 வது வார்டுக்கு உட்பட்டவன் என்ற முறையில் எனது மனைவி பெயரிலும் வங்கி கணக்கு புத்தகம் துவக்கி அதில் 100 ரூபாய் செலுத்தியுள்ளார் தமிழக முதல்வர் அவர்கள் மகளிருக்காக கலைஞர் உரிமைத்தொகை மகளிருக்கு இலவச பேருந்து உட்பட பல்வேறு மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்கி சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாகவும் இதை பயன்படுத்தி மகளிர் அனைவரும் பயன்பெற வேண்டும் என்றும் இந்த சேமிப்பு திட்டத்தை மகளிர் ஆகிய நீங்கள் கைவிடாமல் இதை தொடர வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *