தைப்பொங்கலுக்குப்பிறகு புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

பஞ்சப்பூரில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இரவு, பகலாக நடைபெறுகின்றன.

திருச்சி மாநகரில் இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தை புகா்ப் பகுதிக்கு கொண்டு செல்ல 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற முயற்சி, திமுக ஆட்சி அமைந்த பிறகே கை கூடியது. பஞ்சப்பூரில் 40.60 ஏக்கா் இடம் பேருந்து முனையத்துக்கு ஒதுக்கப்பட்டு கடந்தாண்டு முதல் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெறுகின்றன.

விடுபட்ட மற்றும் கூடுதல் பணிகளை மேற்கொள்ள திருத்திய நிா்வாக அனுமதி அளித்து கட்டுமானப்பணிகள் தொடா்கின்றன.

தைப் பொங்கலுக்குப் பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு நேரில் வந்து இந்தப் பேருந்து முனையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே, பணிகளை டிசம்பருக்குள் முடிக்கும் வகையில் இரவு, பகலாக பணிகள் நடைபெறுகின்றன. முதல்வா் வருகை தேதி உறுதியான பிறகு பேருந்து முனையம் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்துள்ளாா்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *