அன்பில் மக்களை அரவணைத்த அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகள் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார்

மேலும் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பொன்மலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஒன்பது கோடியே 23 லட்சத்தி 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம் கட்டுதல், நாய்கள் கருத்தடை மையம் அமைத்தல், உட்பட பல்வேறு பணிகளை இந்த மூன்று ஆண்டுகளில் முடித்து அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் எனினும் பொது மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க முடியுமா என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தான் என்றும் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக நானும் மாநகராட்சி மா மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களாகிய உங்களை நேரில் சந்தித்து அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களின் குறைகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து அதை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டம் தான் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என்றும்

தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தல் படி இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதாகவும் இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரியிடம் உடனடியாக வழங்கப்பட்டு அதற்கான தீர்வு கேட்கப்பட்டு வெகு விரைவில் முடிக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் எடுத்துரைத்தார்

மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன் பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ,சீதாலட்சுமி ,மற்றும் வட்ட செயலாளர்களான பரமசிவம் , முருகன், தமிழ்மணி ,முருகானந்தம் உட்பட அரசு உயர் அதிகாரிகள் அனைத்து துறையின் அதிகாரிகள் என இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *