
பெரம்பலூர் எம்.பி கே .என். அருண்நேரு வாக்காளருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் பிறந்தநாள் விழா முசிறியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முசிறி டிசம்பர் 16
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் தனது பிறந்தநாள் விழா முசிறியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொட்டியம், முசிறி, தா .பேட்டை, துறையூர், மண்ணச்சநல்லூர், மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துக் கொண்டு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே. என்.அருண்நேருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான விருந்து வழங்கப்பட்டது.
நியூ திருச்சி டைம்ஸ் செய்தியாளர் தொட்டியம் V.செல்வகுமார்



