
தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சடைய பாளையம் மற்றும் சூரியநல்லூர், ஆகிய ஊராட்சிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் – தொடங்க உள்ள புதிய பணிகள் ஆகியவற்றை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
இதில்
திமுக தெற்கு மாவட்ட செயலாளர்இல. பத்மநாபன், குண்டடம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் ஈஸ்வரசெட்டிபாளையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை திறந்து வைத்தும்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி2023- 2024-2025 திட்டம் மூலம் ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் பேட்டைகாளிபாளையத்தில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி மற்றும் ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் மானூர்பாளையத்தில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியையும்
ரூ. 8.25 இலட்சம் மதிப்பில் சடையபாளையம் புதூரில் புதியதாக கட்டப்பட்ட 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் வேங்கிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை அமைக்கும் பணியை துவங்கி வைத்தும் –
திறந்தும் வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியின் போது திமுகவினர்,ஊர் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்
