

2025 -பிப்ரவரி 2 – ஆம் தேதி தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா எம்எல்ஏ தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது
தொட்டியம், டிச.16-
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் உள்ள காளி கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்த தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 2025 -பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவரும் தொட்டியம் நகர திமுக செயலாளருமான எம்.ஏ. ஆர்.விஜய்ஆனந்த், தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு, கோயில் செயல் அலுவலர் வைரவன், ஆய்வாளர் கா.கோ. மலர்விழி, அறங்காவலர் பாஸ்கர், மதிவாணன், ரேவதி, பாமா, மற்றும் தொட்டியம் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6- லட்சம் செலவில் கோயில் சுற்றுச்சுவரை சுற்றி ஃபேவர் பிளாக் சாலை அமைக்க எம்எல்ஏ தியாகராஜர் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த முகூர்த்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜையை முன்னிட்டு மதுரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
நியூ திருச்சி டைம்ஸ் முசிறி செய்தியாளர் தொட்டியம் செல்வகுமார்