

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறைக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் காட்டூர் பகுதி சார்பாக பாப்பாகுறிச்சி மெயின் ரோட்டில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
நான் எங்கு கூட்டத்திற்கு சென்றாலும் கூட்டத்திற்கு முன்பு பேசுவதாக உணர்வதாகவும், ஆனால் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உரையாற்றும் பொழுது எனது தாய் வீட்டின் முன்பு உரையாற்றுவதாக உணர்வதாகவும் எடுத்துரைத்தார் தமிழக பள்ளிகல்வி அமைச்சர்
திருச்சி டிச 17
தமிழக துணை முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதி கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்திற்கு காட்டூர் பகுதி கழகச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான நீலமேகம் தலைமை தாங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகர செயலாளர் மு.மதிவாணன்
மற்றும் கழக செய்தி தொடர்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது இயக்கத்தை சார்ந்து அல்லது இயக்கத் தலைவர்களை பார்த்து யாரேனும் விமர்சித்தாலோ அல்லது ஏழை எளிய மக்களுக்கு நாம் கொண்டு வரக்கூடிய திட்டங்களை விமர்சிப்பவர்களுக்கு தான் கையில் வைத்திருக்கும் தரவுகளை வைத்து எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பவர் தான் கழக செய்தி தொடர்பாளர் சரவணன் என்றும்
இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அவரை வரவேற்பதாகவும் நாங்கள் பொறுப்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும்,
அமைச்சர்களாகவும் மண்டலகுழு தலைவர்களாகவும் மாமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கலாம்
ஆனால் இந்த பொறுப்பிற்கு நாங்கள் அமர்வதற்கு காரணம் எங்களுடைய முதலாளி யார் என்று சொன்னால் எஜமானவர்களாகிய பொதுமக்கள் நீங்கள் தான் என்றும் இதை எங்களுக்கு உணர வைத்து பணியாற்ற வைப்பது தமிழக முதல்வரும், துணை முதல்வரும்தான் என்றும்
மேலும் இந்த காட்டூர் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் தூர் வாரும் பணி, பள்ளி கட்டிடம், மாமன்ற அலுவலகம் கட்டுதல், தாமரைக்குளம் சீரமைத்தல், ஆரம்பசுகாதார நிலையம் கட்டுதல் தெருவிளக்கு அமைத்தல் என 46 கோடியே 79 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும்
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று நேற்றுடன் அந்த பணியை நிறைவு செய்திருப்பதாகவும் மேலும் மற்றொரு பெருமையான தகவல் என்னவென்றால் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியிலேயே இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தான் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுள்ளீர்கள் என்றும் எனவே இன்று காலை 10 மணி அளவில் முதல் வரைநேரில் சந்தித்து அந்த மனுக்களை வழங்க வேண்டும் என்று தனக்கு தகவல் வந்துள்ளதாகவும் மனுக்களில் அதிகமாக இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, மாநகராட்சி பகுதியில் சாலைவசதி, மின்விளக்கு அமைக்க வேண்டும் ஆகியவையே இடம்பெற்றுள்ளதாகவும் இதை நிச்சயமாக முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என்றும், மகளிர் உரிமைத் தொகைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய நாம் பிறந்த நாள் விழா கொண்டாடக்கூடிய தமிழக துணை முதல்வர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்றும் அவரையும் நேரில் சந்தித்து காட்டூர் பகுதி சார்பில் எழுச்சிமிகு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றதாக எடுத்துரைப்பதாகவும் கூறினார்,
மேலும் தமிழக முதல்வர் அவர்களும் துணை முதல்வர் அவர்களும் எங்கு சென்றாலும் மனுக்களை மக்கள் வைத்திருந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி அந்த மனுக்களை அவர்கள் பெற்ற பிறகு தான் வாகனம் புறப்படும் என்றும் ஏனென்றால் தமிழக முதல்வர் கூறியது போல் அதை வெறும் காகிதமாகப் பார்க்கக் கூடாது என்றும் பொதுமக்கள் அந்த மனுவை எழுதும் பொழுது அவர்களின் துயரத்தை அந்த மனுவில் பார்க்க முடியும் என கூறினார்
எனவே திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் என்னிடம் வழங்கிய அனைத்து மனுக்களுக்கும் நிச்சயமாக தீர்வு எட்டப்படும் என எடுத்துரைத்தார்.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர்
கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மாவட்ட பகுதி கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் செந்தில், கார்த்தி, வட்டக்கழகச் செயலாளர்கள் தமிழ்மணி, மன்சூர்அலி, கழக நிர்வாகிகள் தாஜுதீன், மணிகண்டன், மாவட்ட நகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
