டிசம்பர் 17,திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நடுக் கோடியாம்பாளையம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை புரசை உதவும் கைகள் அமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேசன், மற்றும் கோவிந்தராஜ், புதுப்பேட்டை வெங்கட், நலத்திட்டங்களுக்கு அன்பளிப்பு வழங்கிய
ஞானபிரகாசம் சார்பாக வழங்கினார் இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்பு உரிமைக்கானசங்க மாவட்டத் தலைவர் ரவி,தொட்டிய ஒன்றிய தலைவர் நமச்சிவாயம், காட்டுப்புத்தூர் அறம்மகிழ் லோகநாதன், தொட்டியம் கம்யூனிஸ்ட் ராமநாதன்,மற்றும் பலர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நியூ திருச்சி டைம்ஸ் செய்தியாளர் தொட்டியம்V.செல்வகுமார்

