தவெக தலைவர் விஜய் அறிக்கை வினியோகம் செய்த மகளிர் அணியினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

அதன் விபரம் பின் வருமாறு:-

கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள் பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளேன். நீங்கள் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் எந்த சூழ்நிலையிலும் இருக்க வேண்டும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

இந்த அறிக்கையை தமிழகம் முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் துண்டு பிரசுரமாக அளித்து வருகின்றனர்.

சென்னையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். காவல்துறை அனுமதி இன்றி பொது இடத்தில் கூடியதாக கூறி புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் திருச்சி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் அணியினர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு அளித்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *