
தேமுதிக நிறுவனத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் விஜயகாந்த் குடும்பத்தினர் நேரில் சென்று குருபூஜையில் கலந்துகொள்ள கோரி அழைத்திருந்தனர்.
தவெக தலைவர் நடிகர் விஜய்யை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகரன் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் டிசம்பர் 28 அன்று சென்னை கோயம்பேடில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் நினைவஞ்சலி செலுத்த குழுமினர்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அனைத்து தலைவர்களும் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தி அவரை நினைவு கூர்ந்தனர் ஒருவரைத்தவிர.
சமீபத்தில் கட்சி தொடங்கி விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் திரும்பிப்பார்க்க வைத்த நடிகர் விஜய் பெரியார் பிறந்தநாளின் போது அவரது நினைவிடத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியவர் வீர மங்கை வேலு நாச்சியாருக்கும் பெரியாருக்கும் அலுவலகத்தில் படம் வைத்து அஞ்சலி செலுத்திய விஜய் ஏனோ விஜயகாந்த் நினைவு தினத்தில் கலந்து கொள்ளவும் இல்லை அறிக்கையும் தர வில்லை. தன் அலுவலகத்தில் கூட நினைவு அஞ்சலி செலுத்தாமல் புறக்கணித்த செயல் தேமுதிக தொண்டர்களையும் விஜயகாந்த்தின் இரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தோழி திருமணத்திற்கு தனி விமானத்தில் கோவா செல்ல முடிந்த இவருக்கு தன்னை திரையுலகில் ஏற்றி விட்ட ஏணியான கேப்டன் நினைவிடத்திற்கு வர இயலவில்லையா கோயம்பேடு என்ன கடல் கடந்தா உள்ளது இவரின் செய்நன்றி மறத்தலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என வேதனையுடன் கூறுகிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.