திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 4 ஆண்டுகளில் மக்களை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன – அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 3.85 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட திருவளா்ச்சிப்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம், அய்யன்புதூா் கிராமத்தில் நெசவாளா் காலனிக்கு 2 கி.மீ. புதிய தாா்ச்சாலை, சூரியூரில் புதிய துணை சுகாதார நிலையம், சோழமாதேவியில் சமுதாயக் கூடம், நவல்பட்டு ஊராட்சியில் உய்யக்கொண்டான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் என ரூ. 3.85 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 4 ஆண்டுகளில் மக்களை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதேபோல, மக்களின் தேவைகளை அறிந்து தொகுதிக்கான அனைத்துப் பணிகளும் நிறைவேற்றித்தரப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, திருவெறும்பூா் ஒன்றிய குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவா்கள் லட்சுமி திருமுருகன், சண்முகசுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *