வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மீது ஊழல்தடுப்பு பிரிவு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணி புரிபவர் மருத்துவர் ஆர். ரமேஷ்பாபு (55). அவரது மனைவி சர்மிளா. 2002 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நாகாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்பாபு, மெலட்டூர், தஞ்சாவூர், சாலியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் உணவு பாதுகாப்பு துறையில் திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நியமன அலுவலராகவும் தற்போது திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சர்மிளா ஏதும் பணியாற்றவில்லை குடும்ப தலைவியாக உள்ளார். இந்நிலையில், ரமேஷ்பாபு மற்றும் சர்மிளா இருவர் பெயரிலும்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு (லஞ்ச ஒழிப்பு) பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். 1.4.2018ம் ஆண்டு முதல் 31.12.2021ம் ஆண்டு வரை குறியீட்டு காலமாக கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. 1.4.2018 க்கு முன் ரமேஷ்பாபு, சர்மிளா இருவர் பெயரிலும் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.18,64,428 ஆகும். 31.12.2021 வரை ரமேஷ்பாபு, சர்மிளா பெயரில் சேர்ந்துள்ள அசையும், அசையா சொத்துக்கள், சேமிப்பு கணக்குகளில் வைத்துள்ள தொகைகள், வாகனங்களின் மதிப்பு ரூ.2,36,60,294 ஆகும். குறியீட்டு காலத்தில் ரமேஷ் பாபுவுக்கு கிடைக்கப்பெற்ற மாத சம்பளம், மனைவி பெயரில் வங்கியில் பெற்ற கடன், வாகன விற்பனை மூலம் கிடைத்த தொகை, வாடகை மூலம் பெற்ற வருமானம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.1,54,20,796 ஆகும்.
குறியீட்டு காலத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட மொத்த செலவு ரூ.79,18,713 ஆகும். ரமேஷ்பாபு, சர்மிளா இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1,42,93,783 என போலீஸôர் விசாரணை மூலம் தகவல்களை சேகரித்துள்ளனர்.

இது அவர்களது வருமானத்தை கணக்கில்கொள்ளும்போது 92.69 சதவீதம் அதிகமாகும். அந்த வகையில் அரசு ஊழியரான மருத்துவர் ஆர். ரமேஷ்பாபு, அவரது மனைவி சர்மிளா இருவர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸôர் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவர் மாவட்ட நியமன அலுவலராக பொறுப்பேற்ற பின்னர், திருச்சி மாவட்டத்தில், ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு, தரமற்ற உணவுப்பொருள்கள், பழங்கள், அரசால் தடைசெய்யப்ட்ட புகையிலைப் பொருள்கள், ரசாயணம் பயன்படுத்திய பழங்கள், நீண்ட நாள்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனைசெய்யப்பட்ட அசைவ (இறைச்சி) உணவுப்பொருள்கள், கலப்பட எண்ணெய் வகைகள், சமைத்து நீண்டநாள்கள் ஆன உணவு வகைகளை பறிமுதல் செய்துள்ளார். அந்த வகையில் அடிக்கடி வழக்குகள் பதிவு செய்தல், தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கு பூட்டி சீல் வைத்தல், உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.  அந்த வகையில் மாவட்டத்தில் எப்போதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த அவர், தற்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதா, ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *