

கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பகுதிகளில் அச்சு வெல்லம், சர்க்கரை தயாரிப்பில் விலை சரிவு விவசாயிகள் வேதனை….
கூடுதல் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் கோரிக்கை…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் , வீரமாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக அச்சுவேல் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக அச்சு வளம் தயாரிக்கும் பணி மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் மேலும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் அச்சு வெள்ளத்தை சேர்க்க வேண்டும் எனவும், அச்சு வெல்லம் சர்க்கரையின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் விலை குறைந்து விட்டது எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அச்சு வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வந்து அச்சுவெல்லம் மற்றும் சர்க்கரைக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
