தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்….

பிரபு.
தாராபுரம்
செய்தியாளர்.
திருப்பூர் மாவட்டம்
செல்:9715328420

தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்….

தமிழக அரசே! மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது நியாயம் தானா? என கேள்வி எழுப்பி மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள் 150-பேரை போலீசார் சிறை பிடித்தனர்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
தமிழகத்தில்முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது ஏற்புடையதல்ல. மாற்றுத்திறனாளிகள் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது சமூகநீதி, சமநீதி அடிப்படையில் ஆட்சி நடத்தும் தமிழக அரசின் கடமை யாகும்.

ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் 4,000 முதல் 10,000 வரை உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசுதான் அனைத்து அம்சங்களிலும் முன்னேறிய முதன்மை மாநிலமாக விளங்குவதாக சொல்லப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை மட்டும் உயர்த்தி கொடுக்காமல் மாற்றுத்திறனாளிகளை மீண்டும், மீண்டும் போராட்டத்திற்கு தள்ளுவது ஏற்கத்தக்கதல்ல

  • உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் வேதனையின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் – உதவித்தொகை பெற்றுக்கொண்டிருந்த மாற்றுத்திற னாளிகளுக்கு திடீரென இரண்டு மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது – கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 100 நாள் வேலை வழங்கப்பட வில்லை – சட்டப்படி நான்கு மணி நேர வேலைக்கு பதிலாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை வேலை வாங்கப்படு கிறது – வேலை செய்த நாட்களுக்கான கூலி மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது

உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல.ரூபாய் 6,000 முதல் 10,000 வரை உயர்த்த வேண்டும்.நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்.காத்திருப்போருக்கு.உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும்
100-நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் சட்டப்படி நான்கு மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும்.கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி.மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து அண்ணா சிலை அருகே இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இரண்டு வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *