பிரபல உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் கோவை காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்

எங்களது உணவு பொருட்கள் மீது தவறான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் பேட்டி

கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொன்முருகன் , பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வன்னிய ராஜன் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் மயில் மார்க் என்ற பிராண்ட் பெயரில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக மூன்று தலைமுறைகளாக பருப்பு வகைகள், சம்பா ரவை ,சேமியா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக எங்களது தயாரிப்புகளில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வேதிப்பொருள்கள் கலப்படம் செய்து இருப்பதாக ஆதாரமே இல்லாத தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர் .கோவையைச் சேர்ந்த ரவி காந்த் என்பவர் தவறான தகவல்களின் அடிப்படையில் எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பி வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக வேறு சில சேனல்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து எங்களது நிறுவன தயாரிப்புகளை சேர்த்து பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். எங்களது உணவுப் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தரம் பரிசோதிக்கப்படுகிறது. மக்களிடம் இந்த தகவல்கள் ஒருவித பயத்தை உருவாக்கி வருகிறது. எங்களது நிறுவன தயாரிப்புகள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக தகவல்களை கோவையில் புதிதாக துவக்கி உள்ள ஒரு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பரப்பி வருகிறார்கள் என்பது குறித்து புகார் அளித்துள்ளோம். இந்த தகவல்களை பரப்பிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களது நிறுவன தயாரிப்புகள் எந்த வித கலப்படமும் இல்லாதது நாங்கள் தினமும் அந்த உணவை தான் சாப்பிட்டு வருகிறோம். கடந்த அறுபது ஆண்டுகளில் எங்களது நிறுவனம் மீது எந்த புகாருமும் கிடையாது. உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது தயாரிப்பில தரம் குறித்து நன்கு தெரியும் என்று தெரிவித்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *