

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான திருக்கோவில் எலமனூர் எலுமனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த திருக்கோவிலுக்கு பெயர்ப்பலகை மின் விளக்கு ஒளியில் வைக்க வேண்டுமென்று கடந்த 23 ஆண்டுகளாக போராடி வருகிறார் ஒரு மனிதர்.
எலும்பு நோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர் இளங்கோ MS ORTHO தமிழ்நாடு அரசின் உயர் பதவி வகித்தவர். தன்னுடைய ஓய்வுக்காலத்தில் தன் சொந்த கிராமமான எலமனூரில் உள்ள குலதெய்வம் எலுமனாட்சி அம்மன் கோவிலின் வழிகாட்டி பலகை ஒளியிழந்து இருப்பதைக்கண்ணுற்று வண்ண விளக்கொளியில் மின்னும் பெயர்ப்பலகை வைப்பதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால்…….
நீங்கள் மருத்துவராக இருக்கலாம்……
அரசில் உயர் பதவி வகித்தவராக இருக்கலாம்…….
பெரும் தனவந்தனாக கூட இருக்கலாம்……..
ஆனால்………
நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர். அதனால்…….
அதனால் இந்தக்கோவிலுக்கு நீங்கள் செய்வதை எங்கள் சாதியினர் ஏற்க மாட்டார்கள்.
இதைக்கூறியவர் சாதி சங்க தலைவரோ…….
ஊர்த்தலைவரோ……..
கோவில் தர்மகர்த்தாவோ இல்லை…….
இதைக்கூறியவர்……
அரசுப்பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி……
ஆம் அந்த அதிகாரிதான் திருப்பராய்த்துறை தாருகாவணேஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி திருமதி.ராகிணி.
கோவில் செயல் அலுவலரான ராகிணி தன்னுடைய ஆணவப்போக்கினால் இவலை மட்டுமின்றி கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்காத வண்ணம் தடுத்து வந்திருக்கிறார்.
இந்தக்கொடுமையை என்னவென்று சொல்வது?
கடந்த 23 ஆண்டுகளாக போராடிய மருத்துவர் இன்று சட்டப்போராட்டத்தின் மூலமாக வென்றிருக்கிறார். அவருக்கு அந்த எலுமனாட்சியே அகிலாண்டேஸ்வரி ரூபத்தில் தேரில் வந்து உரிமை ஆணையை வழங்கியிருக்கிறார். இப்போது மிகவும் உற்சாகமாக இந்த தள்ளாத வயதிலுத் தன் மனைவியோடு கோவிலுக்கு வந்து தன் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார் இந்த மருத்துவர்.
நம் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாக போராளி ஐயா வை வாழ்த்துகிறோம்.