

7 ஆம் ஆண்டில் கால்பதிக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் 6 ஆண்டுகள் நிறைவு செய்து 7-ஆம் ஆண்டில் கால்பதிக்க உள்ளது. பத்திரிகைத்துறை சார்ந்த உங்களின் அனைவரது ஆதரவு மற்றும் ஒத்துழைப்பும் இந்த வெற்றிகரமான பயணத்திற்கு முக்கிய காரணமாகும். தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பத்திரிகையாளர் நலன், பத்திரிகையாளர் பாதுகாப்பு, உரிமைகள், கடமைகள் உள்ளிட்ட பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு சேவைகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் முழு நேர பணியாக செய்து வருகிறது.
சங்க பணிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு..
சங்க பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கி வருவது..
உடல்நலம் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருவது..
காலமான பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு சங்கம் சார்பில் நிதியுதவி வழங்கியது..
பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கியது..
பத்திரிகையாளர் மகளின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கியது..
பத்திரிகையாளர் குடும்ப துக்க நிகழ்விற்கு நிதியுதவி வழங்கியது..
கண் பல் மற்றும் உடல்நல மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது..
பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கி வருவது..
இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா நோய் தொற்றுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கியது..
கொரானா காலக்கட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியது. அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கியது..
பத்திரிகையாளர்களுக்கு இலவசமாக சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கியது..
கொரோனா தொற்று நோய்க்கு கபசுர குடிநீர், முக கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தொடர்ந்து வழங்கியது..
பத்திரிகையாளர்களின் சுக துக்கங்களில் சங்கம் சார்பில் பங்கேற்று வருதல்..
கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தினமும் மோர் வழங்கியது..
பத்திரிகை RNI சம்மந்தப்பட்ட ஆண்டறிக்கை (E-Filing) தாக்கல் ஆண்டுதோறும் நுற்றுக்கணக்கான பத்திரிகைகளுக்கு முற்றிலும் இலவசமாக செய்து தருகிறோம்..
RNI தொடர்பான அனைத்து பணிகளும் முற்றிலும் சேவை நோக்கில் இலவசமாக செய்து தந்து வருகிறோம்..
பத்திரிகையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனிருந்து முழுமையாக உதவி செய்து வருகிறோம்..
தேசிய பத்திரிகையாளர் தின விழா
பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு
பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்
பத்திரிகையாளர்கள் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்..
ஒற்றுமை பொங்கல் விழா..
இலவச இதழ் வடிவமைப்பு DTP பயிற்சி வகுப்புகள்..
தகவல் அறிவும் உரிமை சட்ட பயிற்சி வகுப்பு..
பத்திரிகையாளர்களை கவுரவித்தல்..
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் மரக் கன்றுகள் நடு விழா..
பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப நல நிதி உள்ளிட்ட அரசு சலுகைகள் பெற ஆவணங்கள் தொடர்பான வழிகாட்டுதல்..
அரசு அடையாள அட்டை விதிகளை தளர்த்த வேண்டி தொடர் முன்னெடுப்புகள்..
பத்திரிகையாளர் தாக்கப்பட்டால் உடனடி கண்டன அறிக்கை மற்றும் உரிய காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உடனிருத்தல்..
தமிழக முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர், செய்தித்துறை இயக்குநர் உள்ளிட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளிடம் பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனுக்கள் அளித்தல்..
கோரிக்கைகள், கண்டன அறிக்கை, இரங்கல் அறிக்கை, வாழ்த்து உள்ளிட்ட அனைத்துக்கும் சங்கம் சார்பில் பங்காற்றி வருகிறோம். சங்க பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சங்கம் செயலாற்றி வருகிறது. இது போன்ற எத்தனையோ நலன் சார்ந்த பணிகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் செய்துள்ளது. நினைவில் உள்ளதை மட்டுமே இங்கு சிலவற்றை மட்டுமே பகிர்ந்து உள்ளோம்.

கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை தாண்டி பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு சேவைகள் செய்துள்ளது மனநிறைவு தருகிறது. சங்கம் சார்பாக செய்யப்படும் நற்பணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களின் பங்களிப்பில் மட்டுமே செய்து வருகிறோம். வேறு எங்கேயும் எப்போதும் நன்கொடை எதுவும் இதுவரை பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ சோதனைகள், அவதூறு பேச்சுகள், விமர்சனங்கள், காழ்ப்புணர்ச்சி கொண்டோரின் சதிகளை தாண்டி நேர்மையுடன் சங்க பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வரும் மாநில மாவட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சங்க தலைவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரது ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறோம்.
என்றும் பத்திரிகையாளர் நலனில்..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தலைமையகம்
9840035480
