முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளான 24.2.2026, செவ்வாய்கிழமை அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார்.

24.2.2026, செவ்வாய்கிழமை

🌟காலை 9.15மணி: சோமரசம்பேட்டை
🌟காலை 9.30மணி: வியாழன்மேடு
🌟காலை 9.45மணி: ஜுயபுரம்
🌟காலை 10.15மணி: பெட்டவாய்த்தலை
🌟காலை 10.45மணி: முசிறி கைக்காட்டி
🌟காலை 11.15 மணி: துறையூர்
🌟 மதியம் 12.00மணி: மண்ணச்சநல்லூர் எம்ஜிஆர், அம்மா சிலை

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இங்ஙனம்:
அஇஅதிமுக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    ரமேஷ் எனும் நான் – நேற்று சாமானியன் இன்று சட்டமன்ற உறுப்பினர்

    இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் ஒரு பாடலின் வரிகள் மிக முக்கியமானவை. ” இவன் பேரே வரலாறு அழித்தாலும் அழியாது ஜனநாயகன்”. இந்தப் பாடலின் வரிகள் தளபதி விஜய் அவர்களுக்கு எப்படி பொருத்தமாக அமைந்துள்ளதோ…

    108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். – துரை வைகோMP

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம்.ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம். ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *