

மரு.சுப்பையா பாண்டியன் RIMP
சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த ஞானமும் அனுபவமும் கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவத்தின் மூலம் பல நோயாளிகளின் நோய்களை குணப்படுத்தியவர்.
அவரிடம் இன்றைய இளைஞர்களை பெரிதும் தாக்கும் ஆண்மைக்குறைபாட்டினை நீக்குவதற்கான ஆலோசனைகளை கேட்ட பொழுது அதை கட்டுரையாக நமது இதழுக்கு தர ஒப்புதல் அளித்தார்.

அவரின் மருத்துவ ஆலோசனைகள் இனி உங்கள் பார்வைக்கு……
ஆண்மை குறைவா கவலை வேண்டாம்.
அற்புத மூலிகை மருத்துவம்
அம்மான் பச்சரிசியை தூதுவளையுடன் துவையல் செய்து சாப்பிட தாது பலப்படும்.
அம்மான் பச்சரிசி கீழாநெல்லி உடன் சம அளவு தயிரில் சாப்பிட தாது இழப்பு தீரும்.

ஓரிதழ் தாமரை பாலில் கலந்து சாப்பிட தாது விருத்தி பலப்படும். தாமரை விதையை பாலில் இரு வேலை சாப்பிட தாது விருத்தி கூடும். துளசி விதை சூரணம் தாம்பூலத்துடன் சாப்பிட தாது பலப்படும்.
வறுத்த திப்பிலிப்பொடி தேனில் காலை மாலை சாப்பிட தாது பலப்படும்.
கோரைக்கிழங்கு சூரணம் தேனில் காலை மாலை சாப்பிட தாது பலப்படும்.
தேங்காய் துவையல் கசகசா சேர்த்து அரைத்து காலை மாலை சாப்பிட தாது பலப்படும்.
பிரண்டை உப்புடன் சாதிக்காய் சூரணம் நெய்யில் சாப்பிட தாது பலப்படும்.
தாளிக்கீரை பருப்புடன் சமைத்து நெய்யுடன் சாப்பிட தாது பலப்படும்.
குமரி எண்ணெய் இரு வேலை சாப்பிடலாம்.
தூதுவளை பூ முருங்கைப்பூ பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிட தாது பலப்படும்.
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சாப்பிட தாது பலப்படும்.

காரைப் பழத்தினை சாப்பிட தாது பலப்படும்.
தென்னம்பாளை பிஞ்சுகளை பசும்பாலில் விட்டு அரைத்து சாப்பிட தாது பலப்படும்.
நீர்முள்ளி விதை நெருஞ்சில் விதை வெள்ளரிக்காய் விதை பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி அருந்த தாது பலப்படும்
உளுந்தக்களி சாப்பிட தாது பலப்படும்.
உளுந்த கஞ்சி சாப்பிட தாது பலப்படும்.
வில்வ பழம் கற்கண்டு சேர்த்து சாப்பிட தாது பலப்படும்.
அரிசி தவிடு பனைவெல்லம் சேர்த்து சாப்பிட உடல் பலம்.
தர்பூசணி கல்யாண பூசணி சாறு பனைவெல்லம் சேர்த்து சாப்பிட உடல் பலம் வரும்.
அதிமதுரம் தேன் வெண்ணை சேர்த்து பசும் பாலில் சாப்பிட தாது பலப்படும்.
தினமும் காலை ஐந்து சிறிய வெங்காயம் சாப்பிடலாம் பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு உலர் திராட்சை வால்நட் முந்திரி உலர் அத்திப்பழம் பேரிச்சி ஆகியவை வலுவூட்டும்.

முருங்கை இலைகளை நெய்யுடன் வறுத்து சாப்பிட தாது பலப்படும்.
விரை வீக்கம் தீர தொட்டால் சிணுங்கி இலைகளை கசக்கி தடவலாம்.
பூசணிக்க ஜாம் செய்து சாப்பிடலாம்.
தூதுவளை மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
ஜாதிபத்திரி வால்மிளகு கிராம்பு அரச மரத்து விதைகள் பால் கலந்து அரைத்து சாப்பிட தாது பலப்படும்.
இலந்தை பழம் எலுமிச்சை சாறு ஆகியவை ஆண்மை பெருக்கும்.
கலியுக சித்தர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன்