
26/10/24 அன்று அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதன் எதிரொலியாக இரண்டு நாட்கள் வார விடுமுறை கழிந்த பின்னர் இன்று, திங்கட்கிழமை காலையிலேயே உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர்
திருப்பராய்த்துறையில் உள்ள திருமஞ்சனத்துறை பாலத்தில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு வேத லட்சுமி , அந்தநல்லூர் பொறியாளர் திருமதி ஜெயசுதா பாலத்தின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். திருப்பராய்த்துறை பஞ்சாயத்து செகரட்டரி திரு சேகர் உடனிருந்து பாலத்தின் நிறைகுறைகளை விளக்கினார்.
பாலத்தின் நிலை பராமரிப்பின்றி சேதம் அடித்து உள்ளது போல் தெரிகிறது என்றும், அதனை சிறு சிறு பராமரிப்பு பணிகள் செய்தாலே பாலம் இன்னும் 20 25 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்றும், மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இது சம்பந்தமாக *மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
திருப்பராய்த்துறை கிராம பொதுமக்களும், சிவன் அடியார்களும் சமூக ஆர்வலர்களும் நியூ திருச்சி டைம்ஸ்க்கு நன்றிகளை தெரிவித்தனர