
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை, நந்தவனப் பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு ஒற்றை குரங்கு ஒன்று மக்களையும். ஆடு மாடுகளையும். நாய்களையும். தொந்தரவு செய்து வருகின்றது மற்றும் மக்கள் சமைத்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றால் இந்த குரங்கு வீட்டினுள் புகுந்து சமைத்து வைத்த உணவுகளை தின்றுவிட்டு பாத்திரங்களை உடைத்து விட்டு செல்கின்றது.
இன்று நந்தவனத்தில் ஒரு ஆட்டை கடித்து அந்த ஆட்டுக்கு கன்னங்கள் மிகவும் வீக்கத்துடன் காணப்படுகிறது. அந்த குரங்கை மக்கள் துரத்தினால் அது பயங்கர கோபத்துடன் கடிக்க வருகிறது. இங்கு சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது குழந்தைகளையும் துரத்துகின்றது, அந்த குழந்தைகள் பயத்துடன் ஓடி வரும்பொழுது கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகின்றன.
இந்த குரங்கின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது நந்தவனத்தில் இன்று ஆட்டை கடித்து விட்டது அது மனிதர்களை கடித்து மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பு தயவு செய்து இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள்.
ஆகவே நந்தவனத்தில் நீண்ட நாள் அச்சுறுத்தல் தரும் இந்த ஒற்றை குரங்கை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.