
பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசை புறக்கணிப்பதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.
வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை கழக பேச்சாளர்கள் மதுரை அலெக்சாண்டர், மன்னை சோழராஜன் ,முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி பொறுப்பாளர்கள் முத்துசெல்வன், தாமரைச்செல்வன், நாசர், கோவி.அய்யாராசு, எஸ். துரைமுருகன், நசீர் முகமது, நடராஜன்,ச.கபிலன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் , மகளிரணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
