அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி

ஆவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்

ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “2026 சட்டப்பேரவை தேர்தல் வரை, ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அவரவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சாரமே செய்யாமல் திமுக ஆட்சிக்கு வர முடியும்” என்று கூறியிருக்கிறார்.

அதே கூட்டத்தில் “கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்றது போல, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி முழுமையான வெற்றியைப் பெரும்” என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்படியொரு நம்பிக்கை முதல்வரது மனதில் உண்மையிலேயே இருந்தால், ஆளுநர் ஆர்.என். ரவி பற்றியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றியும் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்?

அண்ணாமலையால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றால், அவரைப் பற்றி ஏன் பதற்றப்பட வேண்டும்? வரும் சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு எளிமையானதாக இருக்காது. திமுக கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்பது, அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், திமுகவினர் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை, திமுகவினரின் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் அண்ணாமலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார். அவர் வெளியிட்ட ஆடியோவின் விளைவாகத்தான், நிதியமைச்சராக இருந்த உச்ச அதிகாரத்தில் இருந்த ஒருவரை, முதல்வர் ஸ்டாலினே வேறு துறைக்கு மாற்றியிருக்கிறார். அண்ணாமலையின் விளைவு என்ன என்பதை, திமுக அரசில் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டால் சொல்வார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடித்தால் திமுகவுக்கு வேட்டு வைத்து விடுவார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவரை எப்படியாவது மாற்றி விடுவார்கள் என்ற நப்பாசையில், அவரே தொடரட்டும் என்று கூறி தற்காலிக இன்பம் அடைந்து வருகிறார்.

அண்ணாமலை ஜுரம் முதல்ல ஸ்டாலின் அவர்களை ஆட்டி படைக்கிறது. அதனால் தான் திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனா,ல் அதிக இடங்களை கொடுக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டோம் என்பதை கூட்டணி கட்சிகள் வெவ்வேறு விதங்களில் சொல்லி மிரட்டி வருகிறார்கள். நாங்கள் போனால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் வெளியே வந்துவிடும் என்று ஒவ்வொரு கட்சியும் திமுகவை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல் முறைகேடுகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீரழிவு என்று திமுக அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவற்றை எல்லாம் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோபம் வருவது இயற்கை தான். அதைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆவடி பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பற்றி, முதல்வர் ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

எப்போதும் அண்ணாமலை பற்றிய நினைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பற்றி அவரது கட்சியினர் தான் கவலைப்பட வேண்டும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படுவது உறுதி. பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைவதும் உறுதி.

ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைபேசி : 9840170721

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *