
இந்த “Bad Girl” படத்துக்கு ரோடரோம் திரைபட விழாவுல NETPAC விருது கிடச்சிருக்குனு கையில புடிச்சிட்டு சுத்துனானுக..
.
என்னடா இது..? தெற்காசியாவின் சாக்ரடீஸ் மாதிரி நாம இது வரைக்கும் கேள்வியே படாத ஒரு விருதா இருக்கேனு உள்ள போயி பாத்தேன்..
.
அட உண்மைலயே அவனுக தான்ங்க…
.
அந்த NETPACங்கிற விருதோட புள் பார்ம் “The Network for the Promotion of Asian Cinema”ங்கிறது தான் இதோட பெயரே..

.
இது யுனேஸ்கோ நிறுவனத்தோட கொலாப்ரேசன் நுறுவனமாம்..
.
அதாவது.. இது ஆஸ்கர் மாதிரியோ, இல்ல வேற சில விருதுகள் மாதிரி படம் ரிலீஸ் ஆகி அதுல எது நல்ல படம்னு தேர்ந்து எடுத்து குடுக்குற விருது இல்ல..
.
நம்ம ஒரு படத்த எடுத்து… அந்த நிறுவனத்துகிட்ட பணம் கட்டி போட்டு காட்டி.. அதுக்கு Promotion பன்ன சொல்லனும்..
.
அதுவும் இது உலக அளவுலாம் இல்ல.. மொத்தமா ஆசியா & பசிபிக்ல இருக்குற 29நாடுகளோட படத்த மட்டும் தான் Promotion பன்றாங்க..
.

.
இதோட Headoffice சிங்கபூர்ல இருக்கு… அப்பவும் ஒரு டவுட்டு.. சிங்கப்பூர் அளவுலாம் இவனுக ஒர்த் இல்லயேனு திரும்ப தேடி பாத்தா..
.
அதோட பிரான்ச் ஆபீஸ் இங்க டெல்லில இருக்கு.. நம்ம பழைய டூவீலர் கன்சல்டன்சி இருக்கே.. அதே மாதிரி டெல்லில சினிமாவ விளம்பர படுத்தனு சில நிறுவனங்கள் இருக்கு..
.
மீம் போடுறது, காசுக்கு பேச சொல்றதுனு.. அதுல ஒன்ன தான் இவனுக இந்திய பிரான்ச்சா யூஸ் பன்றானுக..

.
அதுலயும் டெல்லி ஆபீஸ் மேளாலர் யாருனா நம்ம JNU பழைய மாணவர் அருண் வாசுதேவ்வாம்..
.
ஏற்கனவே JNU ஒரு நக்சல் கூடாரம்.. அதுல இருந்து வந்த ஆளு.. அது போக தயாரிப்பளர் அனுராக் காசிப் & வெற்றிமாறன் ரெண்டுமே உண்டியல்..

.
உண்டியலுக்கு உண்டியல் ஆதரவு..
.
அந்த NETPAC நிறுவனத்தோட விருது பட்டியல எடுத்து பாத்தா எதுவுமே பிரபலமான படமோ, நல்ல படமோ இல்ல..
.
அதுவும் விருதுகள்ல 75% சீன மொழி படங்கள்.. அதுவும் உப்புமா படங்களுக்கு தான் குடுத்துருகானுக..
.
இவனுக சினிமா திறமை எப்புடி இருக்குங்கிறதுக்கு சின்ன உதாரணம்.. இந்த விருத ஸ்ரீலங்கா வோட சிங்கள படங்கள் 5வாட்டி வாங்கிருக்கு..
.
இதுல இருத்தே தெரிய வேணாமா இவனுக தேர்ந்து எடுக்குற திறமைய..
.
அதுலயும் 2021 & 2022ல விருதே குடுக்கல.. ஏன் அப்பலாம் படமே வரலயா..? இல்ல விருது சீல்டு விக்கிற நாச்சியப்பன் பாத்திரகடை லீவு விட்டுடாங்களானு தெரியல..
.
அதுவும் இதுல அறிமுக இயக்குனர்கள் மட்டும் தான் பங்கெடுக்க முடியும்.. முதல் ரெண்டு படங்களுக்கு விருது குடுத்து Promotion பன்னி குடுப்பாங்க.. அவ்வளவு தான்..
.
சரி.. சிறந்த படம்னு விருது குடுத்துருகானுகளே.. Badgirl கூட எத்தன படம் Nominate ஆச்சி.. அதுல போட்டி போட்டு தேர்வாச்சினு பாத்தா.. லிஸ்டுல படமே இல்ல..
.
ஆமா.. இந்த வருசம் ஒரே ஒரு படம் Badgirl மட்டும் தான் போயிருக்கு அதை மட்டும் பாத்து விருது குடுத்துருகானுக..
.
ஓட்ட பந்தயத்துல தனியா ஓடி முதல் பரிசு வாக்குன மாதிரி..
.
சரி.. இவ்வளவு கஷ்டபட்டு பணம் செலவு பன்னி எதுக்கு இப்புடி விருது வாங்கினதா சொல்லனும்..?
.
ஏன்னா டீசர பாத்தே தமிழ் நாட்டுல மக்கள் இதை ஏத்துக்கல.. அப்ப எதாவது ஒரு விளம்பரம் பன்னி எப்புடியாவது இதை மக்கள் கிட்ட தினிக்க பாக்குறாங்க..
.
விருதுலாம் வாங்கிருக்கு.. எப்புடி இருக்கும்னு கண்டிப்பா A சென்டர்ல இருக்குற இளைஞர்கள் போவாங்க.. அது தான் அவங்களுக்கு வேணும்..
.
குடும்பம் குட்டியோட வந்து பாக்கனும்னு அவங்க நினைக்கல.. இளைஞர்களின் மனசுல இதை தினிச்சி அது மூலமா அடுத்த தலைமுறைய தறுதலையா ஆக்கனும்.. அவ்வளவு தான்..
.
இந்த படத்துக்குலாம் ரோடராம் நெட்பேக் விருது குடுக்க கூடாது.. ரோட்டோரம் புளியமரம் விருது தான் குடுக்கனும்…