

தமிழக அரசின் வருவாய்த்துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கு பொது பிரிவில் பணியாற்ற ஓராண்டு மட்டுமே பணிக் காலம் என்ற விதி இருந்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பணி மூப்பு அடிப்படையில் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் நடைபெற்ற வேண்டும்.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் பணியாற்றும் வட்டாட்சியர்களில் பெரும்பாலானோர் மாவட்ட அமைச்சர்களின் தயவில் ஓராண்டுக்கு மேலாகவும், ஒரு சிலர் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒரே வட்டத்தில் பணி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும், வட்டாட்சியருக்களுக்கான பணியிட மாற்றம் குறித்த மாவட்ட ஆட்சியருக்கு கோப்பு அனுப்பியும், அமைச்சர்களின் நெருக்கடியால் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யாமல் பல மாத காலமாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.