
🦉🕵️அப்படியா.. சங்கதி?🫢
கமலுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த ஒரு எம்.பி. சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக.
ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம்.
இதன் பொருட்டுதான் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். முதலில் கமலின் விருப்பத்தை அறிய அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்துள்ளது திமுக தலைமை. அவரும் கமலை சந்தித்து பேசியிருக்கிறார். ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு பிரதிபலனாக வேறு வகையில் அதனை ஈடுக்கட்ட தயாராக இருப்பதாகவும் நடிகர் கமலிடம் சேகர்பாபு சொல்லியிருந்தாராம்.

சேகர்பாபுவிடம் எந்த முடிவையும் தெரிவிக்காத கமலை இன்னிக்கு சின்னவர் மீட் செஞ்சு அந்த எம்பி சீட்டுக்கு ஈக்வலா என்ன வேண்டும் என்று நேரடியாகக் கேட்டதைக் கேட்டு ஏகத்துக்குக் குழம்பிப் போய் பதில் ஏதும் சொல்லாமல் துணைமுதல்வரை சமாளித்து அனுப்பி விட்டாராம் முன்னாள் பிக் பாஸ்..! இன்னும் ஓரிரு நாளில் ஸ்டாலினுடன் கமல் மீட் இருக்குமாம்.!