
சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையில் மரம் விழுந்து பாதை மூடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும், மரம் அகற்றப்படவில்லை.
மரம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது , ஆகவே கோயில் நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக ஊர் பொதுமக்களும் , பட்டயதார்களு ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டனர், ஆனால் இன்று வரை மரம் அகற்றப்படவில்லை. இந்த ஒரு பாதையை விட்டால் இந்த சுடுகாட்டை அடைய வேறு வழி இல்லை.
அறநிலையத்துறை அனுமதி வழங்கினால் ஊராட்சி நிர்வாகம் மரத்தை வெட்டி தருவதற்கு தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.
பல நாட்களாகியும் இன்று வரை மரம் அகற்றப்படவில்லை, அறநிலை துறை இந்த மரத்தை வெட்டி பாதையை சரி செய்து தர வேண்டும் அல்லது மரத்தை வெட்டி பாதையை சரி செய்வதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.