
SAFETY & SECURITY OF TRAIN, PEOPLE ARE AT DANGER @ RAILWAY GATE NO LC 68 , THIRRUPPARAITHURAI, TRICHY DT
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமம், நந்தவனம் மற்றும் கோவிலூரில் சுமார் 300 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிபிஎஸ்சி CBSE. பள்ளி, தனியார் நிறுவன அச்சகம் செயல்படுகிறது. சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன.
கோவிலூரும் எலமனூர் போல் ஒரு தீவாக உள்ளது இரண்டு ஊரையும் ரயில்வே லைனை ஒட்டி ஒரு ரோடு போட்டு இணைத்து விட்டால் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும், விவசாயம் செழிப்படையும் பேரிடர் காலங்களில் அவசர காலங்களில் கோவிலூருக்கு வண்டி செல்ல முடியும்.
மேற்படி பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திருச்சி கரூர் சாலைக்கு செல்ல ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கடந்த சில வருடங்களாக சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டது. சுரங்கப்பாதை பணி முழுமை பெறுவதற்கு முன்னதாகவே ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவு உயரம் கொண்ட சுரங்கப்பாதை வழியாக சிபிஎஸ்இ பள்ளி பேருந்து வர முடியாத நிலை உள்ளது. இதே போன்று விவசாய விலை பொருட்களான நெல், வாழை, வைக்கோல் போன்றவற்றை சுரங்கப்பாதை வழியாக கொண்டு செல்ல முடிவதில்லை.
மேலும் வேளாண் விளைநிலங்களுக்கு அருகில் சுரங்கப்பாதை அமைந்திருப்பதால் கோடை காலத்திலும் கூட ஊற்று நீர் பெருகி தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சுமார் 3 அடி வரை தண்ணீர் தேங்கி கிடப்பதால் சுரங்கப்பாதை வழியாக பொதுமக்களும், வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாற்றுப்பாதை அல்லாத இந்த சுரங்கப்பாதையால் பாதிக்கப்படும் இப்பகுதி மக்கள், சிபிஎஸ்சி பள்ளி உள்ளிட்டவை வேறு பகுதிகளுக்கு குடிப்பெயர முடியுமா?
மாற்றுப்பாதை இல்லாத ரயில்வே சுரங்கப்பாதை , மிகக் குறைந்த அளவு உயரம் கொண்ட சுரங்கப்பாதை வழியாக விவசாய விலை பொருட்களான நெல், வைக்கோல், வாழை போன்றவற்றை செல்ல முடிவதில்லை. குறிப்பாக விவசாய இயந்திரங்கள், தீயணைப்பு மீட்பு வாகனங்கள் & அவசர/பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய கனரக மீட்பு வாகனங்கள் செல்ல முடியாது.
மழைக்காலம் தொடங்கியுள்ள மழை பெய்யும் போது, மழை தொடக்கத்தில் சுமார் 2-3 அடி வரை தண்ணீர் தேங்கி கிடப்பதால் சுரங்கப்பாதை வழியாக பொதுமக்களும், வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் தற்போது ஒரு மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது அது குறைந்த குதிரை திறன் கொண்டதாக உள்ளது. குறைந்தபட்சம் அந்த இடத்தில் இரண்டு மூன்று மோட்டார்கள் பொருத்தப்பட வேண்டும் . தற்பொழுது மழைக்காலங்களில் திரு மகாமுனி அவர்கள் சிறப்பாக பணி செய்து இரவு பகல் பாராமல் நடுநிசியிலும் மக்கள் நலன் கருதி தண்ணீரை நீக்கி விடுகிறார், அதனால் மக்கள் அந்த பாதையை பாதுகாப்பாக கடக்க முடிகிறது, ஆனால் மின்சாரம் இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்.
தண்ணீர் தேங்கி நின்றால் சிபிஎஸ்இ பள்ளிக்கு லீவு விடுவாங்களா? குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? மின்சார மோட்டருடன் ஸ்டான்ட் பையாக டீசல் மோட்டரும் இணைக்கப்பட வேண்டும் இரண்டு உள்ளூர் இளைஞர்களுக்கு அரசாங்க வேலை தர வேண்டும். நமது ஊரில் வேலை இல்லாத இரண்டு இளைஞர்களுக்கு அந்த இடத்தில் ஷிப்ட் முறையில் வேலை தர வேண்டும்.
மாற்றுப்பாதை அல்லாத இந்த சுரங்கப்பாதையால் பாதிக்கப்படும் இப்பகுதி மக்கள், சிபிஎஸ்சி பள்ளி உள்ளிட்டவை வேறு பகுதிகளுக்கு குடிப்பெயர முடியுமா அல்லது மாற்ற முடியுமா. முழுமையாக சுரங்கப்பாதை பணி முடியும் வரை சிபிஎஸ்இ பள்ளியை மூடி விடுவார்களா ? அல்லது வேறு இடத்திற்கு இடத்திற்கு மாற்றுவார்களா ? நிரந்தர தீர்வுக்கும் முயல்வோம்.
கோவிலூரும் எலமனூர் போல் ஒரு தீவாக உள்ளது இரண்டு ஊரையும் ரயில்வே லைனை ஒட்டி ஒரு ரோடு போட்டு இணைத்து விட்டால் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும், விவசாயம் செழிப்படையும் பேரிடர் காலங்களில் அவசர காலங்களில் கோவிலூருக்கு வண்டி செல்ல முடியும்.
ஃபயர் இன்ஜின் வண்டி செல்ல மாற்று வழி வரும் வரை, இந்த ரயில்வே சுரங்கப் பாதையை மூடி, ரயில்வே கேட்டை – LC68 திறந்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தயவு செய்து இது சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகளின் மேலான கவனத்திற்கும் உரிய நடவடிக்கைக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
Regards
Warrant Officer K Thangaraj (Retd)
Indian Air Force