

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
“தன் வினை தன்னைச் சுடும்”, “கெட் அவுட் மோடி” என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்ரம்
தமிழ் மகன் பிரதமர் மோடியை “கெட் அவுட் மோடி”என்று சொல்லக்கூடிய தமிழின விரோத தீய சக்திகள் அரசியலில் இருந்து விரைவில் அகற்றப்படுவார்கள்.தமிழகத்தில் ஆட்சி செய்வதற்கு தகுதியில்லாத திமுக அரசை, உடனடியாக கலைக்கப்பட வேண்டிய திமுக ஆட்சியை, பெருந்தன்மையுடன் மோடி அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழின் பெருமையை உலகறிய பாராட்டிக் கொண்டு தமிழ் மகனாக வள்ளுவரின் வழியில் திருக்குறள் நெறியில் ஆட்சி செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கும் கடந்த 11 ஆண்டுகளில் மத்திய மோடி அரசால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 1.68 லட்சம் கோடி ரூபாய். ஆனால் காங்கிரஸ் திமுக யு பி ஏ ஆட்சியிலே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 8, 053 கோடி ரூபாய். தமிழகத்துக்கு துரோகம் கிடைத்த காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடியை “கெட் அவுட் மோடி” என்று சொன்னதின் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் இருந்து முதல்ல ஸ்டாலின் ஸ்டாலின் “கெட் அவுட் மோடு”க்கு வந்து விட்டார்.
தமிழகத்தில் மக்கள் கல்வி மருத்துவம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மாணவர்கள் இளைஞர்களை போதை கலாச்சாரம்,
கொலை , கொள்ளை மக்கள் அச்சத்துடன் கவலை உடன் துன்பங்களில் சிக்கித் தவித்து, யாரும் நிம்மதியுடன் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.*
தமிழகத்தில் திமுகவின் மக்கள் விரோத ஆட்சி, இந்திய நாடு சுதந்திரம் அடைந்து இதுவரை எப்பொழுதும் தமிழ்நாடு கண்டிராத வகையில், கொடுங்கோல் ஆட்சியாக, வகுப்புவாத பிரிவினைவாத தீவிரவாத சக்திகளின் கூடாரமாக மக்களை வதைத்து கொண்டிருக்கிறது. கொள்ளையர்களின், கொலைகாரர்களின் புகலிடமாகவும், கஞ்சா போதை கும்பல்களின் முக்கிய வியாபார ஸ்தலமாகவும் தமிழகம் மாறிக்கொண்டு, மாணவர்கள் இளைஞர்களிடம் போதை பழக்கம் தலை தூக்கி, வன்முறை வெறியாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மிக முக்கியமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து கொலை கொள்ளை கற்பழிப்பு பாலியல் துன்புறுத்தல்கள், குறிப்பாக பள்ளி சிறுமிகளே கற்பழித்து கொலை செய்யக்கூடிய சூழ்நிலை என தமிழகத்தின் பெண்கள் வாழ்வதற்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவது பெண்களுடைய மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், திமுகவின் இளவரசர் வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மக்கள் விரோத திமுக அரசிற்கு உள்ள எதிர்ப்பை திசை திருப்ப “Get Out Modi” என ஹேஸ்டேக் போட்டு, இணையக் கூலிகளை வைத்துக் கோடிகளைக் கொட்டி, விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவினரும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் நாட்டில் வேறு பிரச்சனைகள் இல்லாதது போன்று எல்லாவற்றையும் மடைமாற்றி பரஸ்பரம், தமிழகத்தில் நடக்கும் ஊழல் பணத்தை பங்கு பிரித்து, பிணந்தின்னி அரசியல் செய்து சீரழித்த திராவிட மாடல் தலைவர்கள் முதல், புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் வரை தமிழ்நாட்டிற்கான மாற்றம் அல்ல. ஏமாற்றம் என்பதே உண்மை. தமிழகத்தின் அரசியல் குப்பைகளாக செயல்படும் இந்த கட்சிகளை, தமிழக மக்கள் தமிழகத்தை காக்கும் கடவுளாக செயல்படும் பிரதமர் மோடி அவர்களை “கெட் அவுட் மோடி” என்று நன்றி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திய உடன் தங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள்.
எனவே தமிழக மக்கள் நமக்கு நாமே திட்டமாக, நடக்கும் அரசியல் கூத்துக்களை நன்கு புரிந்து கொண்டு, தமிழகத்தின் வளர்ச்சியை வேறிருக்கும் இந்த மக்கள் விரோத சக்திகளுக்கு தகுந்த பாடத்தை வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கற்பிக்க வேண்டும்.
தேசத்தின் வளர்ச்சிக்காக ஓய்வறியாமல் உழைத்து, தமிழகத்தின் நலனுக்காக எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அளித்து, தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தாய்மொழி தமிழோடு தாங்கள் விரும்பும் மொழியை தேர்ந்தெடுத்து படிக்க வாய்ப்பு அளித்ததை மறைத்து, இந்தி மொழியை திணிப்பதாக பிரதமர் மோடி மீது அவதூறு சுமத்தி, தமிழக மாணவர்களின் நலனை புறக்கணித்து கீழ்த்தரமாக அரசியல் செய்யலாமா? வரம் கொடுத்தவன் தலையிலே கை வைத்த அரக்கன் பஸ்மாசுரன் போல செயல்படுவது நியாயமா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
கலைக்கப்பட வேண்டிய திமுக ஆட்சியை, ஜனநாயகத்தை பேணி காக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசு போல் காட்டுமிராண்டியாக செயல்படாமல், பெருந்தன்மையுடன் மோடி அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மத்திய மோடி அரசின் திட்டங்களை தமிழகத்தில் உள்ள ஏழை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்வதற்காக தாயுள்ளத்துடன் செயல்படுவதை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். திமுகவினரே திருந்துங்கள். இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள். கட்டாய ஆட்சி மாற்றத்திற்கு வழியை உருவாக்காதீர்கள்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைபேசி: 9840170721