ஶ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் இணை ஆணையர் மாற்றம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை தலமாக விளங்குகின்றது.

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுவாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி, சித்திரை தேர், தை கருடன் மாசி கருடன் ஆகியவை ஸ்ரீரங்கம் கோவிலின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ஆகும்.

இந்த திருக்கோவிலின் இணை ஆணையராக மாரியப்பன் என்பவர் பணியில் இருந்தார்.

அவர் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இணை ஆணையர் சிவராம் குமார்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்படுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

புதிய இணை ஆணையருக்கு நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *