
🙏🏻 இரங்கல் செய்தி 🙏🏻
நடிகர் / இயக்குனர் மனோஜ் பாரதியின் அகால மரணம் தமிழ் சினிமாவுலகில் பெரும் துக்கத்தையும் அளவிட முடியாத சோகத்தையும் தந்துள்ளது.
தன் ஆண் வாரிசை இழந்து, ஈடு செய்ய முடியாத பெரும் துக்கத்தில்
வாடும் பெருமதிப்பிற்குரிய
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், சினிமா பத்திரிகையாளர் சங்கமும் அதன் உறுப்பினர்களும் எமது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறோம்.
எதை சொல்லியும் தேற்ற முடியாத பெரும் சோகத்தில் வீழ்ந்துள்ள திருமதி மனோஜ் மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகள், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட மனோஜ் பாரதியின் குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை
எமது ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்கிறோம் .
இந்த மீளா துயரில் சினிமா பத்திரிகையாளர் சங்கமும் பங்கெடுத்து கொள்கிறது என்பதை உறுதி படுத்தி, நடிகர் / இயக்குனர்
மனோஜ் பாரதியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம் !
D.R.பாலேஷ்வர்
தலைவர்,
R.S.கார்த்திகேயன்
செயலாளர்,
A. மரிய சேவியர்
பொருளாளர்.
மற்றும் நிர்வாகிகள் & உறுப்பினர்கள்,
சினிமா பத்திரிகையாளர் சங்கம்.