
திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி 9790180409
9791664509
தமிழக முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு மற்றும் குற்ற சம்பவம் ஈடுபடு அதிகரித்து வரும் நிலையில் திருச்சி துவாக்குடி toll plaza வில் திருவெறும்பூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் இணைந்து துவாக்குடி அனைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சை திருச்சி மற்றும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களையும் நிறுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி திருவெறும்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் (DSP) அவர்களின் அறிவுறுத்தலின் படியும்
திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து வாகனங்களும் ஆர் சி இன்சூரன்ஸ் மற்றும் லைசன்ஸ் உள்ளதா மற்றும் நம்பர் பிளேட் சரியாக உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.
சோதனையின் போது பழைய நிலுவையில் உள்ள அபதாரத் தொகை பைன் உள்ளதா அப்படி இருந்தால் அவர்களுக்கு உரிய நேரத்தில் இந்த அபதார தொகையை கட்டிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் நடக்கும் விபத்துக்களை பற்றி ஆய்வாளர்கள் எடுத்து கூறினர்.
மேலும் இங்கு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் நம்பர் பிளேட் முறையாக எழுதப்பட்டு வந்தவுடன் இருசக்கர வாகனத்தை அவரிடம் ஒப்படைக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறினர்.
மேலும் இந்த சோதனையானது வெவ்வேற இடத்திலும் அடிக்கடி நடைபெறும் என பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டினர் தெரிவித்தனர்.