
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை களப்பணியில் இறக்கி வருகின்றன. அந்த வகையில் அனைவரையும் முந்திக்கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அரசு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் கூட்டணிகளுக்கான தொகுதிகளை பிரித்துக் கொடுத்ததோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களையும் மிக சாதுரியமாக அறிவித்திருக்கின்றார். அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பொறுத்தவரை 9 சட்டமன்ற தொகுதிகளில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும் நேருக்கு நேராக மோதுகின்றன நேருக்கு நேராக நேருவிற்கு எதிராக மோதுகின்றன என்பதே நிதர்சனம்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி
தொடர்ந்து இருபது ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாக இருந்து வந்தது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வசமிருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுகவின் வசம் சென்றது. பழனியாண்டி என்கின்ற முத்தரையர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை திமுகவின் வசம் கொண்டு சென்றனர் . இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோர்வையும் உருவாக்கியது என்று கூற வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த பழனியாண்டி மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கு மாற்றாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக துரைராஜ் என்கின்ற முத்தரையர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இரு பெரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியை எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படாமல் துரைராஜ் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்தியுள்ளது . அதே வேளையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளராக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியோ அல்லது முன்னாள் அமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளருமாக பணியாற்றி வருபவருமான வளர்மதியோ போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த சூழலில் தலைமை அதிரடியாக முன்னாள் தமிழ்நாடு அரசு சட்டமன்ற கொரடாவும் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வரும் ஆர் மனோகரனை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிரடியாக அறிவித்தது ..

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே நாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மனோகரன் தான் போட்டியிடுவார் என்று உறுதியாக கூறியிருந்தோம் நம்முடைய வாக்கு அப்படியே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனோகரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட உடனேயே கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். கழகத்தின் நிர்வாகிகளும் அடிப்படை தொண்டர்களும் மீண்டும் ஸ்ரீரங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வசம் வந்துவிடும் என்று உறுதியாக நம்புகின்றனர். அதற்கேற்ப வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த நிமிடம் வரை மனோகரன் ஓய்வு ஒழிச்சல் இன்றி உற்சாகமாக களத்தில் இறங்கி மிக வேகமாக வாக்குகளை சேகரித்து வருகின்றார். காலை 6 மணிக்கு தொடங்கும் அவருடைய தேர்தல் பரப்புரை பயணம் என்பது இரவு 10:00 மணி வரை ஓய்வில்லாமல் நீண்டு தொடர்ந்து வருகின்றது. செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதும் கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு ஆதரவாக அன்போடு பேசுவதும் பொதுமக்களிடையே அவர்கள் பகுதி சார்ந்த குறைகளை கேட்டு உடனடியாக அதை களைவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு உறுதி கூறுவதுமாக மனோகரன் தேனி போல ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியை சுற்றி வருகின்றார். கிட்டத்தட்ட அவருடைய தேர்தல் பரப்பறையில் 80 விழுக்காடு அவர் கடந்து மிகப்பெரிய வெற்றிக்கோட்டை தொடும் நிலையில் இருக்கின்றார் . ஆனால் அதே நேரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரைராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் பெயரளவில் தொகுதியில் சுற்றி வந்து வாக்கு சேகரித்ததோடு சரி மிக பெரிய அளவில் எந்த விதமான எழுச்சியோடும் அவர் சுற்றுப்பயணத்தை இன்னும் தொடங்கவே இல்லை ஒருவேளை இனிவரும் நாட்களில் தான் தொடங்குவாரா என்பது சந்தேகமே . அதே நேரம் திருச்சியில் முக்கியமான அமைச்சரின் அருள் ஆசி அவருக்கு இருக்கின்ற காரணத்தினால் அவரின் ஆசிர்வாதத்தோடும் விட்டமின் பவோடும் எப்படியும் ஸ்ரீரங்கம் தொகுதியை கைப்பற்றி விடலாம் என்கின்ற எண்ண ஓட்டம் அவரிடம் இருக்கின்றது என்பதே நிதர்சனம். ஆனால் ஸ்ரீரங்கம் தொகுதியை பொறுத்தவரை அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமான தொகுதியாக உள்ளது என்பதே தற்போதைய கள நிலவரம்.
இலால்குடி சட்டமன்ற தொகுதி
ஐந்து முறை தொடர்ந்து இலால்குடி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி ஆறாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தவர் சௌந்தரபாண்டியன் ஆனால் அமைச்சர் நேருவுடன் அவருக்கு இருந்த பூசல் காரணமாக அவர் பெயர் பரிசீலனையில் இருந்து விலகி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய ஹோட்டல் நடத்தி வரும் பாரிவள்ளல் என்பவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அமைச்சர் நேருவோடு நெருக்கமானவர் பாரிவள்ளல் இவரோடு கட்சி நிர்வாகிகளுக்கு தொண்டர்களுக்கு எந்த விதமான நெருக்கமும் இன்னும் ஏற்படவே இல்லை. ஒருபுறம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்லின் களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் . கிறிஸ்தவ உடையார் சமூகத்தை சேர்ந்த இவர் லால்குடி பகுதியில் இருக்கும் உடையார் சமூக மக்களின் வாக்குகளை நிச்சயமாக அள்செல்கின்றது… அதேவேளையில் தொண்டர்களோடும் நிர்வாகிகளுடன் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் பரிவள்ளல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வசமிருந்த லால்குடி சட்டமன்ற தொகுதி இப்பொழுது அவர்களின் கைகளில் இருந்து நழுவி லீமா ரோஸ்லினின் பக்கம் செல்கின்றது

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பிரபல தொழிலதிபரும் தனலட்சுமி குடும்பத்தின் இயக்குனருமான கதிரவன் இவர் முதல்வரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் அதே வேலையில் சமீப காலங்களில் சிறுநீரக மோசடி வழக்கில் இவருடைய பெயரும் இவருடைய மருத்துவமனையின் பெயரும் சிக்கியதும் இவருக்கு ஒரு அழியாத கருப்பு புள்ளியாக மாறி உள்ளது தொகுதி மக்களுக்கு இவர் எவ்வளவு தான் பணி செய்து இருந்தாலும் இவரோடு கூட இருப்பவர்களின் செயல்களால் மக்கள் மத்தியில் இவருக்கு ஒருவித கெட்ட பெயர் உருவாகியுள்ளது அதே நேரம் முத்தரையர் சமூகத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக களம் இறங்கும் பரதன் முத்தரையர் சங்கத்தின் மூத்த தலைவர் ஆர் விஸ்வநாதனின் மகன் ஆவார் மேலும் முத்தரையர் மக்களின் அன்பிற்கு பாத்திரமானவர். அதே வேளையில் திமுக வேட்பாளர் கதிரவன் தனது பண பலத்தையும் படை பலத்தையும் கொண்டு மக்களுக்கு இலவசங்களையும் பணத்தையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார் இதை தட்டிக் கேட்கும் அதிமுக பிரமுகர்களை காவல்துறையினரை கொண்டு அடக்குவேலையிலும் ஈடுபட்டு வருகின்றார் இது அந்த பகுதியில் உள்ள மற்ற கட்சிநரை கொதிப்படைய செய்வதோடு பொதுமக்கள் இடையேவும் அவருக்கு ஒரு விதமான நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி வருகின்றது கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார் இப்பொழுது அதிமுகவோடு பாஜகவும் முத்தரையர் சங்கங்களும் இணைந்திருக்கும் காரணத்தினால் நிச்சயமாக பரதன் ஏற்கனவே அவர் பேட்டியில் கூறியிருந்தது போல ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவார் ஒருவேளை கதிரவனின் பண பலமும் படை பலமும் மக்கள் மனதை மாற்றாமல் இருந்தால் என்று தோன்றுகின்றது.
திருச்சி கிழக்கு தொகுதி

இதுவரை 9 தொகுதிகளில் ஒரு தொகுதி என்று அறியப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி இப்பொழுது பேர் வேல்யூ தொகுதியாக மாறி உள்ளது. ஆம் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக களம் இறங்குபவர் நடிகர் விஜய். தமிழ்நாடு முழுவதும் விஜய் அலை மிக வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் களம் இறங்குவது அனைத்து தரப்பு அரசியல்வாதிகளிடமும் பொதுமக்களிடமும் ஒரு விதமான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பிள்ளைமார் சமுகம் அதிகம் நிறைந்த அந்த பகுதியில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கமும் அதிகம் அதனால்தான் கடந்த முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் களம் இறங்கி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இப்பொழுது தன்னுடைய சமுதாய ஓட்டுகளையும் ரசிகர்களின் வாக்குகளையும் கவனத்தில் கொண்டு அந்த தொகுதியில் விஜய் களமிறங்குகிறார் அவருக்கு எதிர் வேட்பாளர்களாக திமுக சார்பில் இனிகோ இருதய ராஜும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவரும் சமூக செயற்பாட்டருமான ராஜசேகரனும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் கிருஷ்ணசாமியும் களம் இறங்குகிறார்கள். போட்டி இனிகோ இருதயராஜிற்கும் விஜய்க்கும் தான் என்பது போல களம் அமைந்துள்ளது அதே வேளையில் ராஜசேகரனும் மருத்துவர் கிருஷ்ணசாமியும் மிகவும் அமைதியான முறையில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வவருகிறார்கள்.

கள நிலவரம் முற்றிலும் விஜய்க்கு சாதகமாகவே உள்ள காரணத்தினால் நிச்சயமாக இனிகோ இருதயராஜின் அரசியல் வாழ்க்கை இந்த தேர்தலோடு முடிந்துவிடும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
மற்ற தொகுதிகளின் கள நிலவரம் விரைவில்




