திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?


திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு தொடர்புள்ள அமைப்பு .
திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் வரும் அனைத்து நிதிகளும் முறைகேடாக இவரே தனிப்பட்ட கல்லூரி வளர்ச்சிக்கு பயன்படுத்திவருவதாகவும்- ரெட்கிராஸ் அமைப்பிற்கு எந்தவிதமான உறுப்பினர்- ஆயுள் உறுப்பினர் சேர்க்காமல்- இந்த திருச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தில் பொதுக்குழு கூட்டமும் கூட்டாமல் பழைய ரெட்கிராஸ் உறுப்பினர்களை மதிக்காமல் புறந்தள்ளி-திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பை தனக்கு ஜால்ரா போடும் நபர்களுக்கு அதில் பதவி வழங்கி- இதன் வரவு செலவு கணக்குகளை கூட சரியாக பராமரிக்காமல் இதற்கு வரும் நன்கொடைகளை தன்னுடைய சொந்த சுய லாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் ரெட்கிராஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் .
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் அந்தஸ்து பதவியில் உள்ள பொறுப்பிலும் உள்ளார். அரசின் முறைசாரா கல்வி முறை குழுவிலும் மாநில பொறுப்பில் உள்ளார். இது போன்று அரசின் பல்வேறு ஆதாயம் தரும் பதவியில் உள்ள இவரின் மனுவை திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும்- தமிழக அரசு ஆதாயம் தரும் பல பதவியில் உள்ள இவர் அதிமுகவின் மாவட்ட பொருளாளராக உள்ளார். அதிமுக கட்சியில் பொறுப்பில் உள்ள இவரைப் போன்ற ஒருவரை கட்சி- மதம்- ஜாதி இல்லாமல் பணியாற்றக்கூடிய திருச்சி ரெட்கிராஸ் தலைவராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எப்படி இதுவரை செயல்பட அனுமதித்தார் எனவும்- பணம் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நினைப்பில் தற்போது அதிமுகவில் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் இவரை வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய மக்கள் கோரிக்கை .
இது தொடர்பான விரிவான ஆதாரங்கள் விரைவில்……..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *