
திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் அருகில்
சுமார் 65 மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தினர் விசாரிக்கையில் இறந்த முதியவர் பெயர் விலாசம் ஏதும் தெரியவில்லை. சில காலமாக அந்த பகுதியில் யாசகம் பெற்று உண்டு, உறங்கி வாழ்ந்து வந்துள்ளார். மேற்படி நபரின் உடலை யாரும் உரிமை கோராத நிலையில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட்சாலமோன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில்
திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில்
சிறப்பு உதவி ஆய்வாளர் முன்னிலையில்
யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

