
தி.மு.கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு !
மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் நாளை 14-11-2024 (வியாழன்) மாலை 7.30 மணியளவில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளின் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். எனது தலைமையில் விமான நிலையத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றோம்
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாவட்ட கழக செயலாளர்,
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.