ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தா

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி வந்த இவர் தற்பொழுது ஓய்வு பெற்று தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது இளைய மகன் மற்றும் மூத்த மகனின் பேரன் பேத்திகள் உள்ளிட்டோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நூற்றி ஒரு வயது ஆனாலும் தன்னுடைய பணிகளை தானே செய்து கொண்டு நல்ல நிலையில் பேசி வரும் இவர் தனது உறவினர்கள் உடன் பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது பேரன் பேத்திகள் என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர். இன்றுடன் தாத்தா கோவிந்தராஜிக்கு 101 வயது நிறைவடைவதை முன்னிட்டு அவரின் மகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என 56 பேர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் உறவினர்கள் இணைந்து தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாத்தாவின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வெகு விமரிசையாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நெஞ்சுக்கு நிம்மதி – குடும்பங்களுக்கு ஆறுதல் – சமயத்தில் உதவிய மனிதாபிமானம்

    ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் இருந்து கிஷோர் சரவணன் மீட்கப்பட்டார் மியான்மரில் சித்ரவதைக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். நெஞ்சுக்கு நிம்மதி கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவம் படிப்பதற்காக…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *