

இன்று சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை மாண்புமிகு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் சா. முத்துசாமி அவர்களும் துவக்கி வைத்தனர். மலை வாழ் பெண்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர்.

