பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சாக்சீடு நிறுவனத்தின் மூலமாக கோவாண்டாகுறிச்சி ஆர் சி ஜேம்ஸ் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இயக்குனர் பரிமளா அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி தலைமை 26.11.24 தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பெர்னா அனைவரையும் வரவேற்று பேசினார் சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி எடுக்கப்பட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1986 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 குறித்தும் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பிற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை குறித்து பேசினார். குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகர் சசிகுமார் குழந்தை தத்துவளம் மையம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ஆகியோர் கல்வியின் அவசியம் முக்கியத்துவம் குழந்தைகள் பாதுகாப்பில் உள்ள அரசு அமைப்புகளான குழந்தை நல குழு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளஞ்சிறார் நீதி குழு குழந்தைகள் உதவி மையம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்கள் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்து வண்ணம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *