பரமன்- விவசாயகளின் பரமேஸ்வரனா இல்லை அரசியல் அறியா பாமரனா

“பரமன் “திரைப்படம் திரையில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது..

விவசாயத்தை மையமாக கொண்டு எடுக்கபட்ட இந்த படத்தை சபரீஷ் இயக்கியுள்ளார், தமீம் படத்திற்கு இசையமைத்துள்ளார், டாக்டர்.நந்துதாஸ் பாடல் வரிகள் எழுதியுள்ளார், வேல்முருகன் பின்னணியில் “கொண்டாட்டம் கும்மாளம் “என்ற பாடல் விவசாயிகளின் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது,

இதய நிலவன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்,

மேலும் நடிகர் பழ கருப்பையா, மீசை ராஜேந்திரன், வையாபுரி, சூப்பர் குட் சுப்பிரமணி, அசோக்குமார், கார்த்திக் பிரபு, கயல்,மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகனாக நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பரமனாக தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரிடமும் நல்ல பராட்டை பெற்றுள்ளார்.

துணை நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார் சஞ்சய் , மற்றும் படத்தின் நாயகியாக மதுமா தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்துள்ளனர்.

இதில் நட்பின் ரீதியாக பத்திரிக்கை நிருபர் bj நவீன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு விவசாயி நிலத்தை அரசாங்கம் நெடுஞ்சாலை அமைக்க பறிக்க நினைக்கிறது. மேலும் அந்த ஊரில் உள்ள சில ஆளுமைகளும் பரமனின் நிலத்தை அபகரிக்க முயல்கிறார்கள். நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரும் பரமன் வென்றாரா என்பது தான் படத்தின் கதை, ஒவ்வொரு விவசாயின் பிரச்சனைகளை பற்றி மிக அழகாக கூறியுள்ளது இந்த பரமன்.

இதுபோன்ற விவசாயம் சார்ந்த படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வர வேண்டும். விவசாயம் என்றால் என்ன விவசாயிகளின் பிரச்சனைகள் உழைப்பு அனைத்தையும்

பாமரனுக்கும் புரியும் விதமாக படமாக்கி இருக்கும் பரமன் படகுழுவினரை மக்கள் பாராட்டி வருகிறார்கள்..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *