சட்ட மாமேதை Dr.அம்பேத்கருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்

புத்தக வெளியீட்டு விழா:

தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சி இதுவாகும்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், புத்தக வெளியீட்டு விழா நடைபெறும் பகுதிக்கு வந்த தவெக தலைவர் விஜய் அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைபடம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    ஸ்ரீரங்கத்தை “சிங்கப்பூர்” ஆக்க ரத, கஜ, துரக, பதாதிகளை களமிறங்கிய அமைச்சர் ரமேஷ்.சதுரங்க சேனைகளின் களப்பணி- நந்தவன மக்களின் 16 ஆண்டுகாலத் துயருக்குத் தீர்வு கிடைக்குமா?

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொகுதி பிரச்சனைகளை பூதக்கண்ணாடிக்கொண்டு அலசும் சதுரங்க சேனைகள். தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ரமேஷ், தனது தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும்…

    தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் – மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய தவெக வினர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன் திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *