

பிரபு
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் செய்தியாளர் செல்:9715328420
சாரா கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனி செல்லும் சாலையில் மணக்கடவு கிராமத்தில் சாரா செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளது.

இக்கல்லூரியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்அம் மையாரின் சேவையை போற்றும் வகையில் விளக் கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு கல்லூரி தலைவர் மரியமுல் ஆசியா தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் முகமது சதுர்தீன், செயலாளர் பெனாசிர் பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்று பேசினார். புதிதாக செவிலியர் பயிற்சி மேற்கொள்ளும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட் டிங்கேல் அம்மையார் நினைவாக விளக்குகளை ஏற்றி வைத்து செவிலியர் களுக்கான உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக கோவை ராயல் நர்சிங்கல்லூரியின் முதல்வர் டாக்டர் மகாலட்சுமி கலந்து கொண்டு நர்சிங்பயிற்சி பெறும் மாணவிகளின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளை வரிசைப்படுத்தி பேசினார். இதனை தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமைச் செவிலியர் பரஞ்சோதி செவிலியர்களின் சிறப்புகள் பற்றி பேசினார்.
கல்லூரி நிறுவனர்
டாக்டர் ஜெய்லானி விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், ‘செவிலியர் பயிற்சி முடித்த ஏராளமான செவிலியர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
அதிலும் தமிழ்நாட்டில் இருந்து பயிற்சி முடித்து செல்லும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே செவிலியர்களுக்கு என்று தேசிய செவிலியர்கள் கமிஷன் ஒன்றை மத்திய அரசு அமைக்கவேண்டும். மேலும் தமிழகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் பல்கலைக்கழகம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.கல்லூரி பேராசிரியை தமிழரசி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியைகள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், கல்லூரிநிர்வாக அலுவலர்கள் ராஜேந்திரன், மக்கள் தொடர்பாளர் சகாபுதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
