
கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் குழுவினரின் சார்பில் சூலமங்கலம் மணக்காடு வாய்க்கால் கரையோரங்களில்
தேசிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சி சமூக ஆர்வலர் அன்பு செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
முன்னாள் அரசு வழக்கறிஞர் TPTR துளசிஅய்யா B.A.B.L. கலந்து கொண்டு பனைமரவிதைகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் M.அழகேசன் உறுப்பினர்கள் துறைமுகம் பாலாஜி,வாசுதேவன் திருக்கோயில் அறங்காவலர்கள் ரமேஷ், செல்வம், மதியழகன் சுற்றுச்சூழல் அணி நல்லதம்பி ,ஒப்பந்தக்காரர் சித்திரவேல் மற்றும் சௌராஷ்ட்ரா சபையினர் ஜமாத்தார்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
