

“ஜில்லு “ஆவனத்தில் மிதக்கும் “திவ்ய பாரதி”
அதென்ன ஜில்லு என்ற விமர்சனம் பல முன் எழுந்தது யார் இந்த திவ்யபாரதி என்ற கேள்விக்கு சாதனை படைத்த ஆவண படத்தை இயக்கிய பெருமிதம் கொண்ட சமூக போராளி என்பதே இவரின் அடையாளம், மனித கழிவு என்ற வார்த்தையை கூற முகம் சுழித்து தயங்கும் இந்த சமூகத்தில் எந்த வித கூச்சமில்லாமல் சமூக உணர்வோடு மிக தைரியமாகவும் பல்வேறு போராட்டங்களுடன் “கக்கூஸ் “என்ற பெயரில் ஆவண படத்தை இயக்கியவர் தான் தோழர் திவ்யபாரதி மக்கள் மத்தியில் இவருக்கு தோழர் என்ற சிறப்பு அடையாளம் உள்ளது, ஒரு இளம் பெண் இப்படிப்பட்ட ஆவண படத்தை இயக்கியது மிக பெரிய ஒன்று சாதாரண நிகழ்வில்லை என்பதே உண்மை, மனித கழிவுகளை அகற்றாமல் அலட்சியம் கொண்டு சுகாதாரமின்றி பயணிக்கும் அவலநிலைகளை விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுத்து கூறும் வகையில் இவரது படைப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது, இந்த ஆவண படத்தை பார்த்தவர்கள் ஏராளம், அதில் பல்வேறு சமூக சேவையாளர்கள், அரசியல் அதிகாரதில் உள்ளவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரின் பாராட்டை பெற்று சிறப்பான விருதுகளையும் குவித்த சமூக சாதனை பெண்மணியாக திவ்யபாரதி அனைவருக்கும் முன் உதாரணமாக உள்ளார், இதை தொடர்ந்து மனித கழிவுகள் அவலநிலையை கண்டு பல நடவடிக்கைகளும் சமூகத்தில் சில இடங்களில் நடந்ததுதான் இவரின் மிக பெரிய சாதனை, இன்றளவும் பல்வேறு நமது தமிழகத்தில் பொது இடங்களில் மனித கழிவு கழிக்கும் நிலைபாடுகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது நாகரீகமற்ற விதமாக பொது கழிவறைகள் கட்டிடங்கள் அரசாங்கத்தால் கட்டபட்டும், முக்கியமாக கிராம பகுதியில் சாலை ஓரத்தில் இது போன்ற செயல்கள் தொடர்ந்து வருவது பெரும் வேதனை பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது போன்ற கேவலமான செயல்கள் எப்போது மாறும்என்ற கேள்விகுறியும் உள்ளது,”கக்கூஸ் “என்ற டைட்டில் வைத்த திவ்யபாரதியின் படைப்பு அவருக்கு மிக பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்தது இதை தொடர்ந்து அடுத்த கட்ட பயணமாக “ஒருத்தரும் வரேல “என்ற ஆவண படத்தை இயக்கினார் இதுவும் சமூகம் சார்ந்த பிரச்சனையை முன் வைத்து பேசிய படைப்பு… (பயணம் தொடரும் )
விமர்சனம் : bj நவீன் (சேலம் )
