
தாடி விவகாரம் – முஸ்லிம் காவலரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி!
சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? – எஸ்டிபிஐ கேள்வி
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மதுரையை சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற முதல்நிலை காவலர், பணியின் போது தாடி வைத்திருந்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் விதமாக, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானாது. இதனை ஒருகுற்றமாக கருதி முதல்நிலை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் காவல் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

தாடி வைத்ததற்காகவும், அதனை முறையிட்டதற்காகவும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியான உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
