ஆளும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்- அழைக்கிறார் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:-

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய; சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியை கண்டித்து,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் (27.12.2024, வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில் No.1 டோல்கேட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி..
அன்புடன்….
மு.பரஞ்ஜோதி.MA.BL
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *