ராஜா…வசூல் ராஜா போலீஸ்காரர்…..

வசூல் வேட்டையில்
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார்

சென்னை மாநகர காவலாக இருந்தபோது பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும் தற்போது தாம்பரம் மாநகரம் என்று பிரிக்கப்பட்ட பிறகு
மறைமலைநகர் காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக ஹேமத்குமார் பணியாற்றி வருகிறார் மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சுப் பணியாளர்களுக்கும் பல லட்சங்கள் கொடுத்து தற்போது கிளாம்பாக்ககம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார் . மேலும்
நல்லம்பாக்கத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் , ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ,
பார்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் மாமூல் வசூல் செய்வதற்கு அவருக்கு கீழ் செயல்படும் போக்குவரத்து காவலர்களை பயன்படுத்தி,
வசூல் செய்து , லஞ்ச தொகையை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார். இதன் காரணமாக அவர் மாதம் தோறும் பல லட்சங்கள் வசூலித்து வருகிறார்.
உயர் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய பணம் குறித்த நேரத்திற்குள் கொடுத்து விடுவதால், இவரை தொடர்ந்து இப்பணியில் அமர்த்தியுள்ளார்கள்.
வேறு எந்த ஆய்வாளர்களுக்கும் அந்த இடத்தை விட்டுத் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் போக்குவரத்தை சீரமைக்க போதிய போலீசார் இல்லை. இந்நிலையில் மாமூல் வசூலிப்பதில் போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்கு அனுபவம் இல்லாத 50 க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்போடு நியமனம் செய்கின்றார் இதனால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
நேர்மையும் திறமையும் உள்ள பல போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் மேலும் இவரால் பாதிக்கப்பட்ட பழி வாங்கப்பட்ட பல ஆய்வாளர்கள் வெவ்வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் பெற்று சென்று விட்டார்கள்.

வசூல் வேட்டையில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் உரிய பங்கை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கொடுத்து வருவதாலும் இவரை வேறு எங்கும் மாற்றாமல் உயர் அதிகாரிகள் பார்த்து கொள்கிறார்கள்

சுழற்சி முறையில் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யாமல் இவருக்கு நிறைய சலுகைகள் உயர் அதிகாரிகள் செய்து வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று இவருக்கு இரவு பணி பிரத்தியமாக நியமிக்கிறார்கள், மிக முக்கிய நபர்கள் வருகையின் பொழுது சுழற்சி முறையில் அட்வான்ஸ் பைலட் பணி மற்ற ஆய்வாளர்களுக்கு தருகிறார்கள் இவர் ஒரு முறை கூட அட்வான்ஸ் பைலட் பணி இதுவரை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்படை காவலர்களை போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணிக்கு ஈடுபடுத்தி விட்டு போக்குவரத்து காவலர்களை வசூல் வேட்டைக்கு ஈடுபடுத்தி வருகிறார்
ஒரு நாளும் களத்தில் நின்று சாலையில் போக்குவரத்தை சீர்படுத்தி பார்த்ததே இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இவரது வசூல் வேட்டைக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா???
நேர்மையும் திறமையும் உள்ள மற்ற ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு வழங்கவார்களா??? இல்லை பட்டா போட்டு கொடுப்பார்களா?

சென்னை புலனாய்வு செய்திக்குழு

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *