அஇஅதிமுக கட்சி சின்னம் வழக்கும் உண்மை தகவல்களும் (ஊடக ஹைனாக்களின் பொய்யுரையை உடைக்க)

அதிமுக கட்சி சின்னம் வழக்கில் பலருக்கு உயர்நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் நேற்று சொன்ன தீர்ப்பை தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் தமிழக ஊடகங்கள் வழக்கம்போல தன் எஜமான விசுவாசத்தைக்காண்பிப்பதற்காக குழப்பி பொய்யான செய்தியை போட்டதால் எது உண்மை இது யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது என்பதை தெளிவாக விளக்க இந்தப் பதிவு.

இப்பொழுது உங்கள் பெயரில் உரிமை உள்ள ஒரு பைக் (அதிமுக எடப்பாடியார் இரட்டை இலை சின்னம் )உள்ளது .
அதற்கு உரிமை கோரி வேறு சிலர் இது எங்களுடைய பைக் என (ஓபிஸ் மகன் ஓபி.ரவீந்திரநாத்,புகழேந்தி,
சூரியமூர்த்தி) நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது நீதிமன்றம் ஆர்.டி.ஓ அலுவலகத்திடம்(தேர்தல் ஆணையம்) உங்களிடம் உள்ள ரெக்கார்டுகளை வைத்து அந்த வண்டியின் ஆர்.சி புக்கை சரிபார்த்து, நீங்களே அந்த வண்டியை வேறு சிலர் தங்களுடையது என சொன்னதில் உண்மை இருக்கிறதா இது விசாரிக்க உகந்த வழக்கா என முடிவு எடுங்கள் என உத்தரவிட்டது நீதிமன்றம்.

சரி இதில் ஆர்.டிஓ அலுவலகம் செய்திருக்க வேண்டியது என்ன தங்களுடைய அலுவலகத்தில் உள்ள பதிவுகள் படி வண்டி யார் பெயரில் உள்ளது சிலர் பொய்யாக வண்டியின் உரிமை கேட்டு வழக்கு தாக்கல் செய்தவர்களை நோட்டீஸ் கொடுத்து அழைத்து உங்களிடம் என்ன ரெக்கார்டுகள் இருகக்கிறது வண்டியின் உரிமை கோர???
என கேட்டிருந்தால் போதும் ஏன் என்றால் தங்கள் ஆர்.டி.ஒ அலுவலகத்திலேயே வண்டியின் உரிமையாளர் யார் என்ற முழு தகவலும் இருக்கும்.இங்கு தேர்தல் ஆணையத்திலேயே அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சின்னம் இரட்டை இலை அவர் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும் என ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆர்.டி.ஓ அலுவலகம் தனக்கு நீதிமன்றம் போன்று வானாளாவிய அதிகாரம் இருக்கிறது என நினைத்துக்கொண்டு தன்னையே இந்த வண்டியின் உரிமையாளரை முடிவு செய்ய சொல்லிவிட்டது நீதிமன்றம் என நினைத்துக்கொண்டு உண்மையான வண்டி உரிமையாளர் (இங்கு அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கும்) நோட்டீஸ் அனுப்புகிறது.

தன்னை விசாரிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விட்டதையும் எதிர்த்து தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும் என அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் விசாரணைக்கு தடை உத்தரவை உயர்நீதிமன்றத்தை அணுகி வாங்குகிறார்.

நீதிமன்றமும் தேர்தல் ஆணையம் தனது வரம்புக்குள் செயல்படாமல், நீதிமன்ற தீரப்பை பயன்படுத்தி தனது அதிகரத்தை மீறி செயல்பட்டிருப்பதை உணர்ந்து,தேர்தல் ஆணையத்திற்கு உங்களிடம் உள்ள ரெக்கர்டுகள் (தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிமுக கட்சி தகவல்கள் )படி செயல்பட வேணடும் என கடுமையாக அறிவுறுத்திய உயர்நீதிமன்ற
நீதிபதிகள் தேர்தல் ஆணையம் உட்கடசி விசயங்களில் மூக்கை நுழைக்க அதிகாரம் இல்லை என பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டியதை தேர்தல் ஆணையமும் ஒத்துக்கொண்டது.இதற்காக தேர்தல் ஆணையம் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்பட்டதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரியது.

சரி இனி நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மொழியிலேயே பார்ப்போம்.

அதிமுக வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய மூன்றாவது டிவிஷன் பெஞ்ச், 1968ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவின் 15வது பத்தியின் அளவுகோலாக இருக்கும் பிரதிநிதித்துவங்களை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தேர்தல் சின்னங்கள் ஆணையின் பத்தி 15, ஒரு அரசியல் கட்சியின் பிளவுபட்ட குழு அல்லது போட்டிப் பிரிவை எந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் பற்றிக் கூறுகிறது. ஒரு அரசியல் கட்சியில் போட்டிப் பிரிவுகள் இருப்பதாக ஆணையம் தன்னிடம் உள்ள தகவலின் பேரில் திருப்தி அடைந்தால், அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த அந்த போட்டி அணிகளில் எந்த அணிக்கு உரிமை உண்டு என்பதை விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கலாம் என்று சட்ட விதி கூறுகிறது.

ஆனால் இங்கு தேர்தல் ஆணையம் தங்களிடம் உள்ள ஆவனங்கள் படி முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுளளதால் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக யாரின் அழுத்தத்தின் பேரில் (பாஜக ) நடவடிக்கை எடுக்க முடியாமல் தேர்தல் ஆணையத்தில் உள்ள பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் படி தான் முடிவெடுக்க நீதிமன்றம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கிடுக்குப்பிடி போட்டுள்ளது அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிச்சாமி மறறும் அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் எம்.பி சிவி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை அவர்கள் டீம்.

இதில் முழு வெற்றி எடப்பாடியார் தரப்பிற்கும் மீண்டும் ஐம்பவதாவது தோல்வி ஓபிஸ் தரப்பிற்கும் என்பது தான் தீர்ப்பை தெளிவாக படித்தவர்களுக்கு புரியும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *